September 10, 2016
பெண்ணை சவப்பெட்டியில் பூட்டி வைத்து 7 வருடம் பாலியல் பலாத்காரம்
அமெரிக்கவைச் சேர்ந்த பெண் கொலீன் ஸ்டான் இவரது வாழ்க்கை அனுபவம் 2 புத்தகங்களாகவும் பல்வேறு டாக்குமெண்டிரிகளாகவும் வெளிவந்து உள்ளன. மீடியாக்களில் இவர் சவப்பெட்டி பெண் என அழைக்கப்படுகிறார். சவப்பெட்டியில் இவர் 7 வருடங்களாக ஒரு பாலியல் அடிமையாக அடைபட்டு கிடந்து உள்ளார்.
பின்னர் இவர் 1984 ஆமாண்டு அதில் இருந்து தப்பி உள்ளார். தற்போது இவரது கதை சினிமா படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அந்த படம் இந்த வாரம் வெளியாகிறது.படத்தின் பெயர் சவப்பெட்டி பெண்.
தனது சோதனையான அனுபவம் குறித்து பீப்பிள்'ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கொலீன் கூறி இருப்பதாவது:-
1977 ஆம் ஆண்டும் காரில் பயணம் செய்து கொண்டு இருந்த கேமரூன் மற்றும் அவரது மனைவி ஜானீஸ் கூக்கர் ஆகியோரிடம் லிப்ட் கேட்டு ஏறினேன். எனக்கு நான் பாதுகாப்பாக இருப்பதாக முதலில் உணர்ந்தேன் ஏன் என்றால் அவர்களிடம் ஒரு குழந்தையும் இருந்தது.
ஆனால் பயணம் நீண்டது. பயணத்தின் முடிவில் கேமரூன் கத்தி முனையில் என்னை மிரட்டினார். பின்னர் எனது என் கைகால்களை கட்டி ஒரு பெட்டியில் அடைத்தார் நான் நினைத்தேன் நான் சாகபோகிறேன் என்று.
கேமரூன் என்னை பாலியல் பலாத்காரம் செய்யவும் கொடுமை படுத்தவும் மட்டுமே என்னை பெட்டியில் இருந்து வெளியே கொண்டு வந்தார். ஒரு நாள் 23 மணி நேரம் பெட்டியிலேயே அடைத்து வைக்கப்பட்டேன்.அவர் என்னை கட்டாயபடுத்தி பாலியல் அடிமையாக இருக்க கையெழுத்து வாங்கி கொண்டார்.
எனக்கு முன்னால் அவரது மனைவியை அவர் பாலியல் அடிமையாக நடத்தி வந்து உள்ளார்.பின்னர் அவர்கள் இருவரும் அந்த இடத்திற்கு வேறு ஒருவரை கொண்டு வர எண்ணி உள்ளனர்.அதில் நான் சிக்கி கொண்டேன்.
பின்னர் 1984 ஆம் ஆண்டும் கேமரூன் மனைவி ஜானீஸ் உதவியுடன் அதில் இருந்து தப்பினேன். கேமரூனுக்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் சாட்சியும் அளித்தார்.என கூறி உள்ளார்.
கேமரூனின் இந்த குற்றத்திற்காக அவருக்கு 104 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கபட்டு உள்ளது. தற்போது சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
பெண்ணை சவப்பெட்டியில் பூட்டி வைத்து 7 வருடம் பாலியல் பலாத்காரம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 10, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 10, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.