ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வெல்ல தகிடுதத்தம் போடுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. விளையாட்டு அரசியல், திறமைசாலிகளை ஒதுக்கித் தள்ளுவது, உள்ளடி அரசியல் என பல காரணங்களை சொல்லலாம். முக்கியமாக விளையாட்டு வீரர் -வீராங்கனைகளை அலட்சியப்படுத்தப்படுவதுதான் இந்தியாவின் விளையாட்டுத்துறை சீரழிவுக்கு முக்கிய காரணம் என்றும் கூறலாம். விளையாட்டுத்துறை அதிகாரிகளால் அலட்சியப்படுத்தப்பட்ட தேசிய பளுதூக்கும் வீராங்கனை ஒருவர் இப்போது டீக்கடை நடத்தி பிழைப்பை ஓட்டி வருகிறார்.
ஹரியானா மாநிலம் சோனிபட் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவரது தந்தை டீக்கடை வைத்துள்ளார். வறுமையான சூழல். படிக்க முடியாத நிலை. பளுதூக்குவதில் திறமையானவர். தேசிய அளவில் 7 முறை சாம்பியனாகி அசத்தியுள்ளார். ஒரு முறை பயிற்சியின் போது, சந்தோசுக்கு மூட்டுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதற்கு பிறகு பளுதூக்குதலில் அவரால் ஈடுபட முடியவில்லை. கையில் பணமில்லாத நிலையில், சிகிச்சையும் எடுக்க முடியாத சூழல். இதனால் தான் விரும்பிய, காதலித்த விளையாட்டை விட்டு விலகினார் சந்தோஷ்.
சந்தோஷுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்ற கனவு இருந்தது. இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற துடிப்பும் இருந்தது. அவரது கனவுகளை வறுமை சிதைத்து விட்டது. அத்துடன் மட்டும் சந்தோஷின் கதை முடிந்து விடவில்லலை. தினசரி வாழ்வாதாரத்துக்கே இப்போது போராடிக் கொண்டிருக்கிறார். தற்போது தந்தையின் டீ கடையை சந்தோஷ் நடத்தி வருகிறார். இதில் கிடைக்கும் வருவாயை வைத்துதான் மொத்தக் குடும்பமும் ஓடுகிறது. பார்ட் டைமாக மல்யுத்தப் போட்டிகளிலும் பங்கேற்கிறார். அதில் கொஞ்சம் பணம் கிடைக்கிறது.

ஹரியானா அரசிடம் தனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டால் சர்வதேச அளவில் பல சாதனைகள் படைக்க முடியும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் முழுமையாக பளுதூக்குதலில் இருந்து சந்தோஷ் விலகிவிட்டார். சந்தோஷ் மட்டுமல்ல அவரைப் போலவே பல வீரர்- வீராங்கனைகள் இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு, முறையான பயிற்சி அளித்தாலே, அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டிகளிலாவது கூடுதல் பதக்கங்களை வெல்ல முடியும்.
மாரியப்பனுக்கு பாலிவுட் நிதியுதவி
ரியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பாலிவுட் படத்தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் சார்பில் 10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. சுல்தான், சக்தே இந்தியா போன்ற படங்களை இந்த நிறுவனம்தான் தயாரித்தது.
மேலும், மாரியப்பன் தங்கவேலுவுக்கு கார் வழங்க வேண்டும் என மஹேந்திரா கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹேந்திராவுக்கு ட்விட்டரில் ஆயிரக்கணக்கானோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து ஆனந்த மஹேந்திரா, மாரியப்பனுக்கு கார் ஒன்றும் தனது தனிப்பட்ட நிதியுதவியாக 10 லட்ச ரூபாய் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.