September 9, 2016
திருநெல்வேலியில் 5 வயது குழந்தை வெட்டிக் கொலை!
திருநெல்வேலியில் மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில், திருமணம் செய்து வைத்த பெண்ணின் 5 வயது மகனை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனைத் தடுக்க முயன்ற பெண்ணுக்கும் கத்திக்குத்து விழுந்தது.
திருநெல்வேலி பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த இசக்கியப்பன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா, அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகத்திற்கும், கலாவிற்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இத்தம்பதிக்கு குழந்தைபேறு இல்லததால் எற்பட்ட குடும்ப தகராறில், மனைவி கலா அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற ஆறுமுகம் குடிபோதையில், தனக்கு திருமணம் செய்து வைத்த பிரேமா மற்றும் அவரது 5 வயது மகன் தருண் மீது குடிபோதையில், கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
படுகாயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில் வழியிலேயே சிறுவன் தருண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த பிரேமா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஆறுமுகத்தை பொதுமக்கள் பிடித்து உதைத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலியில் 5 வயது குழந்தை வெட்டிக் கொலை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 09, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 09, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.