Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 18, 2016

அன்புநாதன் வீட்டில் சிக்கிய ரூ.5 கோடி நத்தம் விஸ்வநாதனுடையது: வருமான வரித்துறை அதிரடி!



கடந்த சட்டசபை தேர்தலின் போது கரூரில் அன்புநாதன் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தினர். இந்த சோதனையில் ரூ.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பணம் நத்தம் விஸ்வநாதனுக்கு சொந்தமானது என்ற தகவல் வந்துள்ளது.




சமீபத்தில் நத்தம் விஸ்வநாதனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு பின்னர் கரூரில் அன்புநாதன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாய் பணம் நத்தம் விஸ்வநாதனுக்குரிய என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.



மேலும் தற்போது நடைபெற்ற சோதனையில் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் இருந்து ரூ.65 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.



அன்புநாதனுக்கும், நத்தம் விஸ்வநாதன் மகன் அமர்நாத்துக்கும் இடையே, தொழில் ரீதியான தொடர்பு இருந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது சிக்கிய பணம் விஸ்வநாதனின் மகன் அமர்நாத் அனுப்பியது உறுதியாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.