September 7, 2016
கர்நாடகாவில் பள்ளி கழிவறையில் குழந்தை பெற்ற 5-ஆம் வகுப்பு மாணவியால் பரபரப்பு!
கர்நாடகா மாநிலம், சாமராஜநகர் மாவட்டத்தில் 14 வயது பள்ளி மாணவி ஒருவர் பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இந்த சம்பவம் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.எம்.ஹில் மொராஜி தேசாய் பழங்குடியினர் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது பெண் தனது பள்ளி கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி ஆசிரியரோ, மாணவிகளோ யாரும் அங்கு இல்லாத சூழலில் குழந்தை பெற்றெடுத்து தானே தொப்புள் கொடியையும் அறுத்துள்ளார் அந்த மாணவி. குழந்தை சத்தம் கேட்கிறதே என பள்ளியின் சமையல் ஊழியர் போய் பார்த்த பின்னர் தான் மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் தெரியவந்தது. இதனையடுத்து மாணவி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது குழந்தைக்கு 20 வயதான சிவ் தான் தந்தை என மாணவி கூறியுள்ளார். இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாகவும், கர்ப்பமாக இருந்ததை யாரிடமாவது கூறினால் அடித்து விடுவேன் என மிரட்டியதால் யாரிடமும் சொல்லவில்லை என்றார். மாணவி கர்ப்பமாக இருக்கும் அறிகுறி பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் யாருக்கும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாணவியின் காதலர் சிவ்-ஐ தற்போது காவல்துறையினர் பிடித்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்
கர்நாடகாவில் பள்ளி கழிவறையில் குழந்தை பெற்ற 5-ஆம் வகுப்பு மாணவியால் பரபரப்பு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 07, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.