Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 26, 2016

​சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!



போலி ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் வீட்டு பணிப்பெண் பானுமதி, தம்மை சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் பாலியல் தொந்தரவு செய்ததாக போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்களையில் மனு தாக்கல் செய்தனர்.

இதில் சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகனின் கையெழுத்து போலியானது என கூறப்பட்டதை அடுத்து, முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் மனுதாரர்கள் போலியான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது  தனிக்குற்றம் என்றும், அது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப் ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் மதுரை கே.புதூர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.