Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 13, 2016

40 பேருந்துகள், 35 லாரிகள் 10 கார்கள் எரிப்பு, வெறிபிடித்த பெங்களூரு - திரும்புகிறதா 1991 கலவர கரு



பெங்களூருவில் தற்போது நடக்கும் கலவரம் காரணமாக இதுவரை 40 தனியார் பேருந்துகள் ,  35 லாரிகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. 10 க்கும் மேற்பட்ட கார்கள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மீண்டும் 1991 பெங்களூரு கலவரத்தை ஞாபகப்ப்டுத்தும் காட்சிகள் அரங்கேற துவங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தில் தமிழர்களின் உயிர்களும், உடமைகளும் சூறையாடப்பட்டன.
இதே போன்றதொரு சூழ்நிலை தற்போது மீண்டும் உருவாகியுள்ளது. பெங்களூரு மற்றும் மாண்டியா வெறிபிடித்த கும்பலால் பெங்களூரு மற்றும் மாண்டியாவில் தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு பதிவெண் கொண்ட  லாரிகள் வாகனங்களை தாக்கி தீவைத்து எரிக்கிறது வன்முறை கும்பல்.




இதை தடுக்க வேண்டிய  போலீசார்  போன இடம் தெரிய வில்லை , சொற்ப அளவில் போலீசார் கலவரக்காரர்களை   அடக்க முயலவில்லை . இதனால் கலவரக்காரர்கள் தைரியமாக தங்கள் வெறித்தனத்தை காட்டுகின்றனர். இதுவரை 35 லாரிகள் எரிக்கப்பட்டுள்ளன.
நைஸ் சாலையில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த 40 பேருந்துகளை ஒரே இடத்தில் கலவரக்காரர்கள் தீவைத்து எரித்தனர். இதில் ஒரே நிறுவனத்தை சேர்ந்த 38 பேருந்துகள் அடக்கம். கர்நாடகாவில் பரவி வரும் கலவரத்தை ஒட்டி தமிழக லாரிகள் கர்நாடகாவுக்கோ , அல்லது வெளிமாநிலம் செல்லும் லாரிகள் கர்நாடகா வழியாக செல்ல வேண்டாம் என லாரி உரிமையாளர் சங்கம்  அறிவுறுத்தியுள்ளது.


1991 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஏற்பட்ட கலவரத்தை யாரும் மறந்திருக்க முடியாது , அதேபோன்ற நிகழ்வுகள் இப்போதும் நடக்காமல் தடுக்க தமிழர்கள் வாழும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கர்நாடக அரசு மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளை அழைத்து வந்து தமிழர்களின் பாதுகாப்புக்காக நிறுத்த வேண்டும் என் று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.