Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 8, 2016

மாதாகோயில் தேரோட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி : சோகத்தில் முடிந்த திருவிழா


நெல்லை மாவட்டம் உவரியில் உள்ள மாதாகோயில் தேரோட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தேர் மின்சார கம்பியில் உரசியதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 15 பேர் திசையன்விளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரதவர் உவரியில் உள்ள மாதா கோயிலில் 10 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் மாதா கோயிலின் சப்பரம் இழுக்கப்பட்டது.

இந்த சப்பரம் இந்த ஆண்டு தான் புதிதாக செய்யப்பட்டுள்ளது. தேர் பணி வலம் வந்து கொண்டிருந்த போது தாழ்வாக இருந்த ஒரு மின்சாரம் கம்பியின் மீது உரசியது. இதில் சப்பரத்தை சுமந்து வந்த ராஜு (19), கிளைவ் (25), ராஜா (31), டிமோ (18) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதனால் ஒருபக்கமாக சப்பரம் சரிந்ததால் அருகில் இருந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அவர்கள் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காயமடைந்த 2 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. திருவிழாவில் இந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துள்ளதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.