Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 8, 2016

4 பேரை பலிவாங்கிய மின்சார ரயில்! சென்னை சோகம்


சென்னை சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தில் நடந்து சென்ற  வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர்  ரயிலில் அடிபட்டு பலியாகினர். சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயில் சேத்துப்பட்டு&நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் இடையே பிற்பகல் 3 மணியளவில் வந்தது. அப்போது, ரயில் வந்த தண்டவாளத்தில் 4 பேர் நடந்து சென்றனர். இதைப்பார்த்த ரயில்வே பைலட் (டிரைவர்) ஹரான் மூலம் எச்சரிக்கை செய்தார். ஆனால் அவர்கள் எதையும் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் ரயிலை நிறுத்த அவர் முடிவு செய்து பிரேக் போட முடிவு செய்தவதற்குள் மின்னல் வேகத்தில் ரயில் 4 பேர் மீதும் மோதியது. தண்டவாளத்திலிருந்து அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதுகுறித்து ரயில்வே பைலட், ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் எழும்பூர் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது ரயிலில் அடிப்பட்ட ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தார். அவரை மீட்டு 108 மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.

இதற்கிடையில் ரயிலில் அடிபட்டு பலியான மற்ற மூன்று பேரின் உடலையும் போலீஸார்  மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான நான்கு பேர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. சம்பவ இடத்தில் டைரி ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் ஒரிசா மாநிலம், கொரப்பூர் பிரசாந்கருடா என்ற பெயர், முகவரி இருந்தது. அதில் இருந்த செல்போன் நம்பர் மூலம் பலியானவர்களின் விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

ஒரே நேரத்தில் 4 பேர் பலியான சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.