September 23, 2016
கோவையில் 3.90 கோடி ரூபாய் கொள்ளை தொடர்பாக காவலர்கள் உள்ளிட்ட 6பேர் கைது
கோவையில் 3.90 கோடி ரூபாய் கொள்ளை தொடர்பாக கரூரை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் உள்ளிட்ட ஆறு பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மலப்புரம் பகுதியை சேர்ந்த தங்க நகை வியாபாரி அன்வரின் பணியாளர்கள் 4 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி சென்னையில் நகைகளை விற்று விட்டு கேரள திரும்பி உள்ளனர்.
அப்போது கோவை பைபாஸ் சாலையில் வந்துகொண்டிருந்த போது, காவல்துறையினர் எனக் கூறி காரையும், காரில் இருந்த 3.90 கோடி ரூபாய் பணத்தையும் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். பணம் கொள்ளை போனதை அடுத்து உரிமையாளர் அன்வர், மதுக்கரை காவல் நிலையத்தில் கார் மட்டுமே காணாமல் போனதாக புகார்
அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கொள்ளை அடிக்கப்பட்ட பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்நிலையில் நேற்று இரவு கரூர் மாவட்டம் பரமத்தி காவல் ஆய்வாளர் முத்துக்குமார் , சுபாஸ், சுகீர், சுபீக் ஆகிய நான்கு பேரை மதுக்கரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையடுத்து குளித்தலை உதவி ஆய்வாளர் சரவணன் , வேலாயுதம்பாளையம் காவலர் தர்மேந்திரனை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை திருச்சி மண்டல துணை தலைவர் அருவண் உத்தரவிட்டார்.
இந்நிலையில் தேடப்பட்டு வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர் தர்மேந்திரன் நேற்றிரவு கரூர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் சரணடைந்தனர். இதனைஅடுத்து இவர்களிடம் கோவை காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் 3.90 கோடி ரூபாய் கொள்ளை தொடர்பாக காவலர்கள் உள்ளிட்ட 6பேர் கைது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 23, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.