September 29, 2016
திருவள்ளூரில் கைதான போலி மருத்துவர்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் ஒரு போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கைதான போலி மருத்துவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.
திருத்தணி அருகே கேஜி கண்டிகை பகுதியில் ராபர்ட் என்பவர் போலியாக மருத்துவம் பார்த்துவருவதாக அப்பகுதி மக்கள் சுகாதாரத்துறையினருக்கு புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் சுகாதாரத்துறையினர் சோதனை மேற்கொண்டதில், ராபர்ட் லேப் டெக்னீசியன் படிப்பை முடித்துவிட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக ஜீவலட்சுமி லேபாரட்டரி என்ற பெயரில் கிளினிக் நடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
இங்கு அவர் அலோபதி மருத்துவராக பணியாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், ராபர்ட்டை திருத்தணி போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூரில் கைதான போலி மருத்துவர்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 29, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 29, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.