September 4, 2016
வியட்நாம் மேம்பாட்டிற்காக 3,300 கோடி ரூபாய் நிதியுதவி - மோடி!
அரசு முறைப் பயணமாக வியட்நாம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வியட்நாம் மேம்பாட்டிற்காக 3,300 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அரசுமுறைப் பயணமாக வியட்நாம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் தலைநகர் ஹனோயில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வியட்நாம் பிரதமர் நியான் ஸாங்-ஐ சந்தித்த நரேந்திர மோடி இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதையடுத்து, இரு நாட்டு பிரதமர்களின் தலைமையில் இரு தரப்பு பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நரேந்திர மோடி மற்றும் நியான் ஸாங் முன்னிலையில், ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் வியட்நாம்-இந்தியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, வியட்நாம் பிரதமர் நியான் ஸாங் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மோடி, பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி விரைவான முன்னேற்றத்தை நோக்கி வியட்நாம் விரைந்து செல்வதாக புகழாரம் சூட்டினார். மேலும், தேசிய தினம் கொண்டாடிய வியாட்நாம் மக்களுக்கு தனது வாழ்த்துகளையும் மோடி தெரிவித்தார்.
மோடி தனது உரையின் முக்கிய அம்சமாக, வியட்நாம் மேம்பாட்டிற்காக 3 ஆயிரத்து 300 கோடி நிதியுதவி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். ஆசியான் நாடுகளின் உறுப்பினரான வியட்நாம் உதவியுடன் பிராந்திய மேம்பாட்டுக்கு இந்தியா பாடுபடும் எனவும் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
வியட்நாம் மேம்பாட்டிற்காக 3,300 கோடி ரூபாய் நிதியுதவி - மோடி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 04, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 04, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.