Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 10, 2016

'300 கிலோ பத்தாது... 470 கிலோ இலக்கு!' - நிஜ இஞ்சி இடுப்பழகியின் கதை


அமெரிக்காவைச் சேர்ந்த, 27 வயதான Monica Riley என்பவரின் எடை 300 கிலோ ஆகும். இவர்தான் உலகிலேயே அதிக அளவு உடல் எடை கொண்டவராவார். ஆனால், இவருக்கு இந்த எடைப் போதாதாம். இன்னும் உடல் எடையை அதிகமாக்கி பெரிய்ய்ய அளவில் சாதனை செய்ய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளார். அதாவது 470 கிலோ எடையை கூட்டவிருக்கிறார்.

மோனிகா தொடர்ந்து யூ டியூப் சேனலில், தான் இடைவிடாமல் சாப்பிடுவதை பதிவேற்றி காண்பவர்களை வெறுப்பேற்றி வருகிறார். நாள் ஒன்றுக்கு 8000 க்கும் மேற்பட்ட கலோரிகளை உண்டு வருகிறார். ஒரு நாளுக்கு ஆறு பிஸ்கட்ஸ், ஆறு வகையான சாஸ் வெரைட்டிக்களை சேர்த்த பிரட் ரோல், ஒரு பெரிய பவுலில் கெலாக்ஸ், நான்கு சிக்கன் சான்விட்ச், நான்கு டபுள் சீஸ்பர்கர், மக்ரோனி சீஸ், ஐஸ்கிரீம் என தொடர்ந்து எதையாவது உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கிறார்.

'என்னுடைய மிகப்பெரிய லட்சியம் எதிர்காலத்தில் 450 கிலோ ஏற்றி உடலை இன்னும் பருமனாக்க வேண்டும். உடல் எடையை அதிகரிக்க அதிகரிக்க நான் என்னை ராணியாக உணர்கிறேன். என் கணவர் சிட்னி இதற்கு முழு ஒத்துழைப்பைத் தருகிறார். இப்படி இருந்த போதிலும், தாம்பத்யம் குறித்து அதிகமாகப் பேசிக்கொள்வோம். என் கணவர்  நான் எழுவதற்கும், பெட்டில் உறங்க வைப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கிறார். மேலும், நான் அசந்து தூங்கியப்பிறகு என்னை மற்றொரு பக்கம் புரட்டி விடுவார். என்னால் தனியாக திரும்பிப் படுக்க முடியாது. அதற்குப் பதிலாக அவர்தான் என்னை புரட்டிப்ப் போட்டுத் தூங்க வைப்பார். எனக்கு என்னுடைய அழகான வயிறு பிடித்திருக்கிறது.

நான் எவ்வளவு வெயிட் போட்டாலும் சரி எனக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. தற்போதும் அந்த பிளானில்தான் இருக்கிறோம். ஆனால் என்னுடைய தாயார் என்னிடம் நிறைய முறை 'என்னை நானே கொன்று கொண்டிருப்பதாக' அறிவுரை கூறியிருக்கிறார். எனக்கு அவருடைய அன்பு புரிகிறது. ஆனால் எனக்கு எடை அதிகரிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. சில சமயம் என்னுடைய சுதந்திரம் பாதிக்கப்படுவது குறித்து வருத்தமாக இருந்தாலும், என் கணவர் சிட்னி என்னை எப்போதும் கஷ்டப்பட விடமாட்டார் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. என்னுடைய வெயிட் அதிகம் ஆனப் போது  முன்பு இருந்த காதலர் எடையை சர்ஜரி செய்து குறைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். அப்படி எடையை குறைக்காவிட்டால் இருவரும் பிரிந்துவிடுவோம் என்றும் கூறினார். எனக்கு எடை குறைப்பில் சிறிதும் விருப்பம் இல்லை. எனவே, அவரை விட்டு விலகிவிட்டேன். இப்போது இருக்கும் என்னுடைய காதலர் சிட்னி எனக்கு மிகவும் ஆதரவாகவும், அக்கறையாகவும் என்னைப் பார்த்துக் கொள்கிறார். என்னுடைய படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்துவிட்டு உணவு மற்றும்  உடை என எனக்குத் தேவையான உதவிகளை பலதரப்பட்டோர் செய்து வருகிறார்கள். என்னுடைய தாயாருக்கு இதில் வருத்தம் இருக்கிறது. ஆனால், இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. இப்படியே வாழ ஆசைப்படுகிறேன்' என்கிறார் மோனிகா. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.