Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 14, 2016

இரண்டு நாள் கழித்து வாய் திறந்தார் மோடி; 2 மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும்



காவிரிப் பிரச்சனையில் கர்நாடகத்திலும், தமிழகத்திலும் கலவரங்களும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளன.

கர்நாடகவில் ஒருபடி மேலேச் சென்று, தமிழகத்தின் உடைமைகள் தீவைத்து கொளுத்தப்பட்டு உள்ளன.



ஆனால், இந்த இரண்டு நாள்களும் இரு மாநிலங்களிலும் பேரமைதியில் இருந்ததைப் போலவும், சிறு பிள்ளைகள் குச்சி மிட்டாய்க்கு சண்டைப் போட்டுக் கொண்டிருப்பதால் இரண்டு குச்சி மிட்டாய்களை வாங்கி கொடுத்து விடலாம் எனவும் மத்திய அமைச்சரவையும் இதனைப் பற்றி வாய் திறக்காமல் மூடிக் கொண்டிருந்தது.

பிரதமர் மோடியும் பல ஊர்களைச் சுற்றித் திரிந்து வந்த களைப்பில் நன்றாக ஓய்வெடுத்து இருந்ததால், மத்திய அமைச்சர்களும் காவிரிப் பிரச்சனையை அவர் காதிற்கு கொண்டு செல்லவில்லை போலும்.

இப்போது, திடிரென விளித்துக் கொண்ட மோடி காவிரித் தொடர்பாக தனது வாயைத் திறந்து தமிழகம் மற்றும் கர்நாடக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

“கர்நாடக மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என்பது கவலை அளிக்கிறது. கர்நாடகம் மற்றும் தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும். இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். நாட்டின் நலனே முக்கியம் என்பதை மக்கள் உணரவேண்டும். பொறுப்புகளை மனதில் வைத்து இரு மாநில மக்களும் செயல்பட வேண்டும்.” என்று வாய்த்திறந்தார் மோடி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.