September 10, 2016
தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு : தமிழக அரசு
பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழக அரசு ரூ.2 கோடி பரிசுத் தொகை அறிவித்தது. தங்கப்பதக்கம் வென்று இந்திய மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் மாரியப்பன் பெருமை சேர்த்துள்ளார் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
மாரியப்பனுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட பல பல அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா துறையினர் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக மாரியப்பன் பெயரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருந்தும் மாரியப்பனுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு : தமிழக அரசு
Reviewed by மறத்தமிழன்
on
September 10, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
September 10, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.