Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 14, 2016

துபாய் பூர்ஜ் கலிபாவில் 22 வீடுகளை வாங்கி அசத்திய இந்தியர்..!


 உலகின் மிக உயர்ந்த கட்டிடம் துபாயில் உள்ள பூர்ஜ் கலிபா, இதில் 22 அற்புதமான வீடுகளை மெக்கானிக்காக இருந்து தொழிலதிபராக மாறிய ஒரு இந்தியரிடம் உள்ளது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? இந்தக் கட்டிடத்தில் அதிகப்படியான வீடுகளை உடையவரும் இவர்தான் என்று காலீஜ் டைம்ஸ் என்ற நாளிதழ் ஜார்ஜ் வி நேரேபரம்பிளின் பேட்டியை வெளியிட்டுள்ளது.

22 வீடுகளோடு நிறுத்தப் போவதில்லை ஜார்ஜ் வி நேரேபரம்பிள் இந்தப் பேட்டியில் கூறும்போது நான் இந்த 22 வீடுகளோடு நிறுத்தப் போவதில்லை, இன்னும் நல்ல விலைக்கு வீடுகள் வரும்போது வாங்கத்தான் போகிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து கனவு காண்பேன் நல்ல விலைக்குக் கிடைக்கும் போது கண்டிப்பாக வாங்குவேன். "நான் கனவு காண்பவன், தொடர்ந்து கனவு காண்பேன்" என்று பேட்டியில் தெரிவித்துள்ளார்.

காரணம் கேரளாவில் பிறந்த ஜார்ஜ் வி நேரேபரம்பிள் உலகின் மிக உயர்ந்த கட்டடத்தில் அதிக வீட்டை வைத்திருக்கும் ஒரு பெரிய தனிநபர் உரிமையாளராக உள்ளார். இன்று இந்த நிலைக்கு இருபதர்க்கு இவரை உறவினர் விளையாட்டுக்காக உன்னால் 828 மீட்டர் உள்ள பூர்ஜ் கலிபாவில் கால் கூட எடுத்து வைக்க இயலாது என்று கூறியதே பெரிய காரணமாக இருந்துள்ளது.

வீடு வாடகை விளம்பரம் 2010 ஆம் ஆண்டு பூர்ஜ் கலிபாவில் வீடு வாடகைக்குக் கிடைக்கும் என்ற விளம்பரத்தைப் பார்த்த அடுத்த நாளே அந்த வீட்டிற்கு வாடகை செலுத்தி வசிக்க துவங்கி உள்ளார். 22 வீடுகள் 6 வருடங்கள் கழித்து இன்று 900 குடியிருப்புகள் உள்ள இந்தக் கட்டிடத்தில் 22 வீடுகளை தனக்கு சொந்தம் ஆக்கி இருக்கிறார். மேலும் இதில் 5 வீட்டை வாடகைக்கு அளித்துள்ளதாகவும், மீதம் இருக்கும் வீடுகளையும் வாடகைக்கு விட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 ஏசி விற்பனை 1976 ஆம் ஆண்டு முதன் முதலாக மிகவும் வெப்பமான பகுதியான சார்ஜாவில் குளிர் சாதன பொருட்கள் ஏசி போன்றவற்றை விற்கச் சென்று இருக்கிறார்

ஜார்ஜ் வி நேரேபரம்பிள். குப்பையை பணமாக்கும் முயற்சி இவருடைய 11 வயதிலேயே தனது தந்தையின் தொழிலுக்கு உதவியாக இருந்தது மட்டும் இல்லாமல் குப்பையை பணமாக்கும் முயற்சியில் வெற்றி பெற்று இருக்கிறார்.

 இவரது ஊரில் பருத்தி ஏற்றுமதி செய்து வருபவர்களில் பலர் பஞ்சை மட்டும் பிரித்து எடுத்துவிட்டு அதில் உள்ள கொட்டையை குப்பையில் போட்டுள்ளதை பார்த்த இவர் அதில் இருந்து பசை எடுத்து லாபம் பார்த்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் புளியங்கொட்டை விதைகள் போன்றவற்றை சேகரித்து அதைக் கால்நடை தீவனங்களுக்காக விறைப்பன செய்துள்ளதாக தன்னுடைய கடந்த காலத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.