Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 9, 2016

விசாரணைக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்: 21 பேர் கைது



திருச்செந்தூர் அருகே இருதரப்பினர் மோதலை விசாரிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தில் கடந்த 2 நாட்களாக கோவில் கொடை நடந்து வருகிறது. இதில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் சாம் அருள்ராஜ், தலைவன்வடலிக்கு விசாரணைக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு கும்பல், சாம் அருள்ராஜை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 21 பேரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.