Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 30, 2016

உலகக் கிண்ணம் 2016: சிறுமிகளை விபச்சாரத்துக்கு திணிக்கும் பிரேசில் முகவர்கள்



லண்டன்: இன்னும் 12 நாட்களில் ஆரம்பமாகும் கால்பந்தாட்ட உலகக்கிண்ணம் தென் அமெரிக்கா கண்டத்தின் பிரேசிலில் இடம்பெறுகிறது. இவ்வுலகக் கிண்ணப் போட்டிகள் ஜூன் மாதம் 12ம் தகிதியிலிருந்து ஜூலை 13ம்

உலகக் கிண்ணப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் நாடுகள் உல்லாச இரசிகர்களால் பல பில்லியன் வருமானங்களைப் பெறுகின்றன. இதற்காகவே ஓர் சர்வதேச உலகக் கிண்ணப் போட்டிகளை ஏற்பாடு செய்யும் நாடுகள் தலையை வைத்தாவது பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு, தங்களது நாட்டிற்கு வருகின்ற வெளிநாட்டு விருந்தினர்களை சகல வகைகளிலும் கவனித்து மகிழ்வித்து அனுப்பிவைப்பது வாடிக்கை. தற்பொழுது, பிரேசில் கால்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை பாரிய சிக்கல்களுக்கு மத்தியில் நடாத்த இருக்கின்றது. 

உலகக்கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் 12 நாட்களே இருக்கும் நிலையில், சில மைதானங்களின் வேலைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் குறைநிலையில் இருக்கின்றன. இன்னும், உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு எதிரான உள்ளுர் கிளர்ச்சிகள் தலைநகர் உட்பட இன்னும் பிரதான நகரங்களில் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், தென் அமெரிக்காவின் சொர்க்கபுரியாக அழைக்கப்படும் பிரேசிலை நோக்கி வெளிநாட்டு உல்லாச இரசிகர்கள் வந்து சேர்ந்தவன்னமிருக்கின்றனர். Copacabana-Beach[1] வருகின்ற உல்லாச விருந்தினர்களைக் கவனிப்பதற்கு ஆபாச கடற்கரைகள், கிளப்கள், களியாட்ட விடுதிகள், உல்லாச ஹோட்டல்கள், மசாஜ் நிலையங்கள் மற்றும் உணவகங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.

 தென் அமெரிக்கா நாடுகளில் ஏற்கனவே விபச்சாரத்தில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்றான பிரேசில், உலகக் கிண்ணப்போட்டிகளுக்காக அதன் முகவர்கள் விசேட சேவைகளை வழங்கத் தயாராகி வருகின்றனர். பிரேசிலில் ஒரு மில்லியன் விபச்சாரிகள் இருக்கின்றனர். உலகக் கிண்ணத்துக்காக மேலும் பலர் உருவாகி, உருவாக்கப்பட்டு இரக்கின்றனர். 

இவ்வுலகக் கிண்ணப் போட்டியைக் காண ஐந்து இலட்சம் வெளிநாட்டினர்கள் பிரேசிலுக்கு வரவிருக்கின்றனர். prost (2) வெளிநாட்டு விருந்தினர்களைக் கவர்வதற்காகவும், அதிகபட்ச இலாபங்களைச் சம்பாதிக்கவும் விபச்சார முகவர்கள் 18 வயதைப் பூர்த்தி செய்யாத சிறுமிகளை குறிப்பாக பாடசாலை மாணவிகளை களத்தில் இறக்கியிருக்கின்றனர். பலர் நண்பர்களாலும், ஆசைவார்த்தைகளாலும், பண ஆசைகளாலும் விபச்சாரத்திற்கு திணிக்கப்பட்டிருக்கின்றனர். 

 பதின்மூன்று, பதினான்கு மற்றும் பதினைந்து வயதையுடைய வறுமைக் கோட்டிற்குக் கீழ்வாழும் பல சிறுமிகள் றியோ நகருக்கு ஆசைவார்த்தைகளால் அழைத்துவரப்பட்டிருக்கின்றனர். இவர்களுள் பலர் அவர்களது பெற்றோர்களிடம் பொய்களைக் கூறி, வாக்குவாதத்திற்குப்பின் ஒரு மாத விடுமுறை என்ற பேரில் பிரேசிலின் தலைநகருக்கு அழைத்துவரப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு அழைத்துவரப்பட்டிருக்கும் இந்தச் சிறுமிகளுக்கு ஒழுங்கான ஆடைகளை வழங்காமல், உணவுகளின்றி, தரைகளில் உறங்க வைக்கப்படுவதாக இந்தச் சிறுமிகள் கூறியிருக்கின்றனர். இவ்வாறு அழைத்துவரப்படும் சிறுமிகள் வெளிநாட்டு உல்லாச விருந்தினர்களுக்கு ஒரு தடவைக்கு 100 றீல்களுக்கு (26 அமெரிக்க டொலர்) விற்கப்படுகின்றனர். 

ஆகக் குறைந்தது 700 றீல்களை ஒருநாளைக்கு இச்சிறுமிகள் உழைத்துக் கொடுக்க வேண்டும் என முகவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். prost இன்னும் சில சிறுமிகள் வேறு கதைகளின் மூலம் அவர்களின் பெற்றோர்களின் அனுமதியுடன் அழைத்துவரப்பட்டிருக்கின்றனர். விடயம் அறிந்த சிறுமிகள், எங்களைத் தொடாதீர்கள், எங்கள் பெற்றோர்களிடம் அனுப்பிவிடுங்கள் என கெஞ்சி மன்றாடியும், குறித்த முகவர்கள் ஆயுதங்களை காட்டி இச்சிறுமிகளை பலவந்தப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக 13வயதையுடைய சிறுமியொருவர் வெளிநாட்டு ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார்.

 இதன் பின்னரே இச்சம்பவம் உலகக்குத் தெரிய வந்தது. இவ்வாறான சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுவதையிட்டு உலக சிறுவர் அமைப்புக்கள் தற்பொழுது கண்டனங்களை எழுப்பிவருகின்றனர். கடந்த 2010 தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற பீபா உலகக்கிண்ணப் போட்டிக்கு 40,000 வெளிநாட்டு விபச்சாரிகள் தென் ஆபிரிக்காவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.