September 7, 2016
தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகள், வாகனங்கள் ஓசூர் எல்லையில் 2வது நாளாக நிறுத்தம்
தமிழகத்திற்கு காவிரி நீர் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் போராட்டம் நடந்து வருவதால், தமிழக அரசு சார்பில் இயக்கப்படும் 49 பேருந்துகள் 2வது நாளாக ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
இதனால், சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகளில் செல்லும் பயணிகள் ஓசூரில் இறக்கி விடப்படுகின்றனர். பின்னர் அவர்கள் கர்நாடகா அரசு பேருந்துகளில் மாறி, பெங்களூரு செல்ல வேண்டியுள்ளது.
குழந்தை மற்றும் பெண்களுடன் செல்லும் போது மிகவும் நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் கர்நாடக அரசு பேருந்துகள் அனைத்தும், குளிர்சாதன பேருந்து என்பதால், நடுத்தர மக்களால் பயணிக்க முடியாது என்றும், இந்த பிரச்னை அனைத்து மக்களை பாதிக்கும் என்பதால், இரு மாநில அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனிடையே, கர்நாடகாவில் நடந்து வரும் தமிழகத்திற்கு எதிரான போராட்டங்கள் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 தமிழக அரசு பேருந்துகள் நேற்றிரவு 11 மணியளவில் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தப் பேருந்துகள் நாளை மறுநாள் வரை
கர்நாடகாவுக்கு இயக்கப்பட வாய்ப்பில்லை எனவும் தமிழக அரசு போக்குவரத்து கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகள், வாகனங்கள் ஓசூர் எல்லையில் 2வது நாளாக நிறுத்தம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 07, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.