September 9, 2016
1991ஆம் ஆண்டு நடைபெற்றதைப் போல் மீண்டும் கலவரம் வெடிக்கும்: கன்னட அமைப்பு
கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவளிக்காவிட்டால், 1991ஆம் ஆண்டு நடைபெற்றதைப் போல் மீண்டும் கலவரம் வெடிக்கும் எனக் கன்னட ரக்சண வேதிகே அமைப்பு எச்சரித்துள்ளது.
காவிரி ஆற்றில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டதைக் கண்டித்துக் கர்நாடகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு 54தமிழ்த் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் அங்குள்ள கன்னடத் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய கன்னட ரக்சண வேதிகே அமைப்பின் தலைவர் தர்மேந்திரா, கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவளிக்காவிட்டால், 1991ஆம் ஆண்டு நடைபெற்றதைப் போல் தமிழர்களுக்கு எதிராக வன்முறை வெடிக்கும் என எச்சரித்துள்ளார்.
அதேபோல் கொப்பல் மாவட்டத்தில் பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திரனைக் கன்னடர்களுக்கு எதிரானவர் எனக் கூறிக் கன்னடத் தொலைக்காட்சிகளில் அவருக்கு எதிராக வன்முறை தூண்டப்படுவதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
மேலும், கன்னட நடிகையான ராகினி திவேதி, காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வாட்ஸ் ஆப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நமக்கே குடிக்க தண்ணீர் இல்லாத போது அவர்களுக்கு ஏன் தரவேண்டும்?’ என கேள்வி எழுப்புவதுடன், ‘என்னுடன் இணைந்து வாருங்கள் களம் இறங்கி போராடுவோம்’ என்றும் அறைக்கூவல் விடுத்துள்ளார்.
ராகினி திவேதியின் வீடியோ பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கன்னட நடிகைக்கு தக்க பதிலடி தரும் வகையில் தமிழகத்தில் இருந்து யார் யாரெல்லாம் குரல் கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
1991ஆம் ஆண்டு நடைபெற்றதைப் போல் மீண்டும் கலவரம் வெடிக்கும்: கன்னட அமைப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 09, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 09, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.