September 11, 2016
இரண்டாவதும் பெண் குழந்தை’ பிறந்ததால் விரக்தி: 17 முறை குழந்தையை குத்தி கொன்ற கொடூர தாய்!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தாய் ஒருவர் அவளுடைய நான்கு மாத குழந்தையை 17 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேரந்தவர் நேஹா கோயல்(35). இவருக்கு ஏற்கனவே எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது இரண்டாவது ஆண் குழந்தை கிடைக்க வேண்டும் என்ற விருப்பத்தில் பல பூஜைகளை செய்துள்ளார் கோயல். மேலும் வாடகை தாய் மூலமும் முயன்றுள்ளார். ஆனால் அவருக்கு இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் மேல் வெறுப்பில் இருந்த கோயல் சமையலறையில் இருந்த கத்தியால் குழந்தையின் உடலில் 17 முறை குத்தி கொலை செய்துள்ளார்.
இதையடுத்து, கோயல் குழந்தையை காணவில்லை என கூக்குரல் விட்டுள்ளார். குடும்பத்தினர் 2 மணி நேரம் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. தகவல் அறிந்து வந்த போலீசார், குளியலறையில் போர்வையில் சுருட்டி குழந்தையின் சடலம் வைக்கப்பட்டதை கண்டுபிடித்து மீட்டனர்.இது குறித்து, ஜெய்ப்பூர் போலீஸ் அதிகாரி அங்க்ஷுமன் போமியா கூறுகையில் ‘குழந்தை உடலில் 17 காயம் உள்ளது கண்டறியப்பட்டது. தடய அறிவியல் சோதனைக்கு பின் குற்றவாளி கோயல் என அறியப்பட்டது. மேலும் இக்குற்றத்தை கோயல் ஒப்புக்கொண்டுள்ளார்’ என கூறினார். இச்சம்பவம் அறிந்த கோயல் கணவர் மற்றும் அக்கம்பத்தினர் அதிர்ச்சியில் மூழ்கினர். இது தொடர்பாக, போலீசார் நேற்று கோயலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டாவதும் பெண் குழந்தை’ பிறந்ததால் விரக்தி: 17 முறை குழந்தையை குத்தி கொன்ற கொடூர தாய்!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 11, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 11, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.