Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 28, 2016

ஃபேஸ் புக்கில் சாட் செய்து 12 பெண்களுடன் உல்லாசம் - யூடியூபில் காதலியுடன் இருக்கும் படத்தை வெளியிட்ட



சென்னையில் 12 இளம் பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்து படம் எடுத்து அதை யூடியூபில் பரவ விட்ட  இளைஞரால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த ஆசாமியை கைது செய்தனர். அவரிடமிருந்து இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை போலீசார் கைப்பற்றினர்.
சென்னை சிந்தாதிரிபேட்டையை சேர்ந்தவர் திவ்யா(21)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) .  பிபிஏ பட்டதாரியான அவர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார்.  அப்போது அப்பா காரில் பெட்ரோல் போட வந்த மைலாப்பூர்  சிவசாமி சாலையை சேர்ந்த சாமுவேல்(21) என்ற வாலிபருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது.  ஃபேஸ்புக் பார்க்கும் பழக்கம் உண்டு.. ஆரம்பத்தில் சாதாரணமாக பழகிய இருவரும் நாளாவட்டத்தில் நெருக்கமாக சாட் செய்ய துவங்கினர்.
 சாமுவேல் தந்தை விஸ்வநாதன் மைலாப்பூரில் பழை கார்கள் விற்பனை மையம் நடத்தி வருகிறார். பெரிய இடத்து பிள்ளையான சாமுவேல் தோற்றம் அழகில் மயங்கி தன்னையே பறிகொடுத்துள்ளார் திவ்யா. பழக்கம் அதிகமாகி அடிக்கடி சந்திக்க துவங்கி உள்ளனர்.
இதில் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதை மறக்காமல் தன் செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளார் சாமுவேல். பின்னர் சிறிது நாளில் சாமுவேல் அந்த படத்தை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனிடையே சாமுவேலின் மனம் மாறியது , வேறொரு பெண்ணை நோக்கி அவரது மனம் தாவத்தொடங்கியது. இதற்கிடையில் திவ்யாவை சந்தித்த சாமுவேலின் நண்பர்கள்  திவ்யாவும் சாமுவேலும் ஒன்றாக இருக்கும் படத்தை காட்டி மிரட்டியுள்ளனர். படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி ஆயிரக்கணக்கில் பணம் பிடுங்கியுள்ளனர்.
 ஆரம்பத்தில் பணம் கொடுத்த திவ்யா போகப்போக செய்வதறியாமல் சாமுவேலிடம் நியாயம் கேட்டுள்ளார். ஆனால் சாமுவேலும் திவ்யாவை மிரட்டியுள்ளார். இதற்கிடையே ஃபேஸ் புக்கிலும் , யூ டியூபிலும்  இருவரும்  உல்லாசமாக இருக்கும் படம் வெளியாகி உள்ளது. வேறு வழியில்லாமல் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கம் போல் எனக்கென்ன என்ற தொனியில் விசாரிக்க மனம் நொந்து போன திவ்யா தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த போலீசார் சாமுவேலை தூக்கி வந்துள்ளனர். சாமுவேலிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. திவ்யாவை ஃபேஸ்புக்கில் பிடித்தது போல் 12 க்கும் மேற்பட்ட பெண்களை சாமுவேல் மயக்கி உல்லாசமாக இருந்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.
சாமுவேல் தந்தை விஸ்வநாதன் கார் வியாபாரி என்பதால்  ஒவ்வொரு பெண்ணையும் மயக்கும்போதும் விதவிதமான கார்களை எடுத்து செல்வாராம். 12 பெண்களை ஏமாற்றினாலும் அனைவருடனும் இன்று வரை பழக்கத்தை பராமரித்து வருகிறாராம்.
Image result for chintadripet police station
கைது செய்யப்பட்டவுடன் சாமுவேல் சொன்ன தகவல்கள் போலீசாரிடம் சொன்ன தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈசிஆர் சாலையில் உள்ள ரிசார்ட்டுக்கு தான் விரும்பும் பெண்களை அழைத்து சென்று கடலில் குளித்து ஆட்டம் போட்டு பின்னர் ஜாலியாக இருப்பாராம். அதை படமும் எடுத்து வைத்து கொள்வாராம்.
 இப்படி 12 பெண்களை மயக்கிய கதையை கூறியுள்ளான். சரி எப்படி மயக்குவாய் என்று கேட்டால் கொஞ்சம் பழகியவுடன் இனிக்க இனிக்க பேசுவேன், அவர்கள் உணர்வுகளை தூண்டுவேன் பின்னர் வாழ்க்கை ஒரு முறைதான் , வாழ்வதும் ஒரு முறைதான் அதை நம்மை விரும்புபவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று பேசியே கவிழ்த்துவிடுவேன் சார் என்று கூறியுள்ளான்.
 திவ்யாவை மிரட்டி பணம் பறித்த நண்பர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திவ்யா தவிர வேறு யாருக்கும் சாமுவேல் சிக்கியது தெரியாது. ஆகவே இதன் பின்னர் சாமுவேல் மீது ஏமாற்றப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
டெய்ல் பிஸ் ; மதுரவாயலில் உள்ள இன் ஜினியரிங் கல்லூரியில் பயிலும் சாமுவேல் 5 அரியர்ஸ் வைத்துள்ளார். கல்லூரி பக்கமே தலை காட்ட முடியாதாம். காரணம் அங்கும் இரண்டு பெண்களை மயக்கி ஏமாற்றி சிக்கலில் சிக்கி உள்ளாராம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.