Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 26, 2016

​அணைகள் வற்றியதால் 1,200 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்!



திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே கடனா, ராமநதி அணைகள் வற்றியதால் ஆழ்வார்குறிச்சியில் 1,200 ஏக்கர் நெற்பயிர்கள் காய்ந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 85 அடி கொள்ளளவுள்ள கடனா அணையில் 25 அடி தண்ணீர் உள்ளது. இதே போல் 84 அடி கொள்ளளவுள்ள ராமநதி அணையில் 25 அடி தண்ணீர் உள்ளது.

இந்நிலையில் கடனா அணையின் தென்கால் பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் வரவில்லை. இதனால் 1200 ஏக்கர் பரப்பில் கார்ப்பருவ நெற்பயிர் காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.