Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 10, 2016

12 வயது மாணவியை மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவத்தால் பரபரப்பு!



வேலூர் அருகே பணம் திருடியதாக 12 வயது மாணவியை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் மாதனூர், பட்டுவாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற மாணவியுடன் அருகே உள்ள ஊரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு சென்று பார்த்த போது, அவரின் கைப்பையில் வைத்திருந்த 2 ஆயிரத்து 200 ரூபாய் பணம் காணாமல் போனதை அடுத்து அதிர்ச்சியடைந்த பிரியா, அதனை மாணவி பிரியதர்ஷினி தான் திருடி விட்டதாக முடிவு செய்தார்.

இதனைத்தொடர்ந்து மாணவியின் வீட்டிற்கு சென்ற பிரியாவின் உறவினர்கள், பிரியதர்ஷினியை  மின் கம்பத்தில் கட்டி வைத்து உதைத்துள்ளனர்.

சுமார் 2 மணி நேரம் இவ்வாறு தொடர்ந்து மாணவி தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை அறிந்து பெங்களூரிலிருந்து மாதனூருக்கு வந்த மாணவி பிரியதர்ஷினியின்  பெற்றோர் இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.