September 4, 2016
குஜராத்தில் பசு ஒன்றின் வயிற்றில் இருந்து 100 கிலோ எடை அளவிலான குப்பை: மருத்துவர்கள் அதிர்ச்சி
குஜராத்தில் பசு ஒன்றின் வயிற்றில் இருந்து 100 கிலோ எடை அளவிலான பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
அகமதாபாத்தில் உள்ள ஜிவ்தா அறக்கட்டளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட பசு ஒன்று வயிற்றுப் பகுயில் வீக்கம் காணப்பட்டது.
இதனால் பசு கர்ப்பம் தரித்திருக்கிலாம் என்று கருதிய மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். இதையடுத்து அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதில், பசுவின் வயிற்றில் 100 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக், இரும்புக் கம்பிகள், மின்சார ஒயர்கள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டது.
மக்காத மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற பிளாஸ்டிக் குப்பைகளை பாதுகாப்பற்ற முறையில் வீதிகளில் வீசுவதால், இதுபோன்ற விலங்குகள் அதை உண்ணும் நிலை அதிகரித்துள்ளது.
மட்டுமின்றி கிராமங்கள் கூட தற்போது புற்பூண்டுகளை இழந்து காண்கிரீட் காடுகளாக மாறி வருவதால் ஆடு மாடுகள் குப்பைகளையும் கழிவுகளையும் உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது என விலங்கின ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்
குஜராத்தில் பசு ஒன்றின் வயிற்றில் இருந்து 100 கிலோ எடை அளவிலான குப்பை: மருத்துவர்கள் அதிர்ச்சி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 04, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 04, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.