Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 7, 2016

காட்டு வழியாக 10 கி.மீ நடந்துச் சென்று மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியை!


கர்நாடக மாநிலம் தர்வாட் தாலுகாவில் உள்ள தொபெனாட்டி கிராமத்தின் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை சுமித்ரா கொலுரு. கடந்த 2005ம் ஆண்டு முதல் 11 ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் அவர், தனது வீட்டில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு பேருந்திலும், நடந்தும் செல்கிறார்.

அல்நாவரில் உள்ள வீட்டில் இருந்து பேருந்தில் புறப்படும் சுமித்ரா, தோரி பகுதியில் இருந்து பள்ளிக்கு 5 கிலோ மீட்டர் நடந்து செல்கிறார். எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லாத நிலையில், அடர் காட்டுப்பாதை வழியாக நடந்துச் சென்று பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்.

5 கிலோ மீட்டர் நடந்து செல்லும் வழியில் 2 கிலோ மீட்டர் மட்டுமே பாதை வசதிகள் உள்ளதால் 3 கிலோ மீட்டர்கள் காட்டு விலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் பாதை வழியே பள்ளிக்கு சென்று வருகிறார்.

வசதி வாய்ப்பு குறைந்த, கூலி வேலை செய்து அன்றாட வாழ்வை கழித்துவரும் தொபெனாட்டி கிராம மக்களின் குழந்தைகள் படித்து நல்வாழ்க்கை பெறுவதற்காக இந்த சாகச பாதை வழியே உயிரை பணயம் வைத்து சென்று பாடம் எடுப்பதாக சுமித்ரா தெரிவித்துள்ளார்.

மாணவர்களை பல்வேறு வகை சுரண்டலுக்கும், சாதிய ரீதியிலான கொடுமைகளுக்கும் சில ஆசிரியர்கள் உட்படுத்துவதாக செய்திகள் நாளொருமேனி வெளியான போதிலும், தன்னை அழித்துக் கொண்டு மாணவர்கள் வாழ்வில் விளக்கேற்றும் இத்தகைய ஆசிரியர், ஆசிரியைகளுக்காகவே ஆண்டிற்கு ஒருமுறை அல்ல தினம் தினம் ‘ஆசிரியர் தினம்’ கொண்டாடலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.