பீகார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் 12 மாவட்டங்களை சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த மழையால் பீகாரில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அம்மாநித்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பீகாரின் ஜெகனாபாத் பகுதியில் 10 வயது சிறுவன் தன் உயிரை பணயம் வைத்து வெள்லத்தில் சிக்கிய மூழ்கிய நான்கு பள்ளி மாணவிகளை காப்பாற்றியுள்ளான்.
கோபால்பூர் கிராமத்தை சேர்ந்த மாணவிகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஆற்றைக் கடந்தபோது எதிர்பாராத விதமாக தடுமாறி ஆற்றின் வெள்ள நீரில் விழுந்துள்ளனர்.
ஆற்றில் நீரின் ஓட்டம் வேகமாக இருந்ததால், அவர்கள் உயிருக்கு போராடியுள்ளனர். அசம்பாவிதத்தை கண்ட அங்கிருந்த 10 வயது சிறுவன் தன் உயிரை பற்றி கவலைப்படாமல் ஆற்றில் குதித்து ஒவ்வொரு மாணவியாக மீட்டு கரை சேர்த்துள்ளார்.
இதில் இரண்டு மாணவிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர், துணிச்சலுடன் செயல்பட்ட சிறுவன் நான்கு மாணவிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
உயிரை காப்பாற்றிய சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.