September 20, 2016
மேலும் 10 நாட்களுக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க, கர்நாடகாவிற்கு உத்தரவு!
காவிரியில் வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க, கர்நாடகாவிற்கு காவிரி மேற்பார்வைக்குழு உத்தரவிட்டுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகள் காவிரி மேற்பார்வை குழுவை அணுக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, டெல்லியில் கடந்த 12-ம் தேதி, காவிரி மேற்பார்வைக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், தண்ணீர் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் டெல்லியில் இன்று மீண்டும் காவிரி மேற்பார்வைக் குழு கூடியது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடக அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின் முடிவில், காவிரியில் வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க, கர்நாடகாவிற்கு மேற்பார்வைக்குழு உத்தரவு பிறப்பித்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிசேகர், காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட மேற்பார்வைகுழுவிற்கு அதிகாரம் உள்ளது என்றார்.
மேலும் தேவைப்பட்டால் இரு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும் சசிசேகர் குறிப்பிட்டார். அத்துடன் காவிரி மேற்பார்வைக்குழுவின் அடுத்தக் கூட்டம், அக்டோபர் மாதம் நடைபெறும் என்றும் சசிசேகர் தெரிவித்தார்.
மேலும் 10 நாட்களுக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க, கர்நாடகாவிற்கு உத்தரவு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.