தனது சிறு வயது புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியதால், பெற்றோர் மீது ஆஸ்திரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளின் சிறுவயது புகைப்படங்களை தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றி வந்துள்ளனர். குழந்தையாக பிறந்ததில் இருந்து செய்த சேஷ்டைகள், குறும்புத்தனம் முதல் ஆடையில்லாத படங்கள் வரை ஃபேஸ்புக்கில் தொடர்ந்து பதிவேற்றியிருக்கின்றனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து மகளின் 500க்கும் மேற்பட்ட புகைப்படங்களை அவரது பெற்றோர் ஃபேஸ்புக்கில் பதிவேற்றி வந்துள்ளனர். அவர்களது ஃபேஸ்புக் நண்பர்கள், தற்போது 18 வயது நிரம்பிய அந்த இளம் பெண்ணிண் ஆடையில்லாத குழந்தை படங்களைக் பலருக்கும் ஷேர் செய்துள்ளனர்.
தன்து பெற்றோரின் இந்தச் செயலால் வருத்தமும் வேதனையும் அடைந்த அந்த இளம் பெண், தனது பெற்றோரிடம் அந்த படங்களை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். பல முறை வற்புறுத்தியும் பெற்றோர் அந்த புகைப்படங்களை நீக்க மறுத்து விட்டனர். அத்துடன், 'நீ எங்கள் மகள், உனது படங்களை பதிவேற்றும் உரிமை எங்களுக்கு இருக்கிறது ' என்று வேறு பேசி அவரை புண்படுத்தினர். இதனால், மனவேதனையடைந்த அந்த இளம் பெண் வியன்னா நீதிமன்றத்தில் தனது பெற்றோர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இது குறித்து அந்த பெண் கூறுகையில், ''சிறு குழந்தையாக ஆடையில்லாமல் இருப்பதில் இருந்து டாய்லட் படங்கள் வரை அவர்கள் புகைப்படங்களாக எடுத்து தொடர்ந்து பதிவேற்றி வந்துள்ளனர். இது எவ்வளவு அவமானகரமான விஷயம். நான் அவர்களிடம் இப்படி செய்ய வேண்டாம் என பல முறை கூறியும் வற்புறுத்தியும் எனது மனநிலையை அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. எனது கருத்தை சீரியசாகவும் எடுத்துக் கொள்ளவில்லை '' என வேதனைத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரியாவில் பெற்றோர் மீது அவரது மகள் வழக்குத் தொடர்ந்திருப்பது இதுதான் முதல் முறை. சட்ட வல்லுநர் ரேமி இந்த வழக்கு குறித்து கூறுகையில், அந்த இளம் பெண் வழக்கில் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. மகளின் புகைப்படத்தை அவரது அனுமதியில்லாமல் பேஸ்புக்கில் பகிர்ந்தது தவறு என நீதிமன்றம் கருதினால் அல்லது அடுத்தவரின் தனிப்பட்ட விஷயங்களில் பெற்றோர் தலையிடுவது தவறு என நீதிமன்றம் கருதினால், அதற்கான பின்விளைவுகளை பெற்றோர் சந்திக்க வேண்டியது இருக்கும்'' என்றார்.
ஆனால் ஆஸ்திரிய நாட்டு சட்டப்படி, இது போன்ற விஷயங்களுக்கு எல்லாம் பெரிய அளவில் தண்டனை வழங்கப்படுவதில்லை. இழப்பீடாக கொஞசம் பணம் கொடுக்க வேண்டியது இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதே வேளையில் பிரான்ஸ் போன்ற நாடுகளில் பெற்றோராக இருந்தாலும் மகளின் அனுமதி பெறாமல் ஃபேஸ்புக்கில் புகைப்படங்களை பதிவேற்றினால், ஒரு வருடம் சிறைத்தண்டனையுடன் 45 ஆயிரம் யூரோவும் அபராதமாக விதிக்கப்படும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.