Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 19, 2016

அந்த 6 பந்துகளை ஸ்டுவர்ட் ப்ராட் மறக்கமாட்டார்!


இந்த நாளை காலிங்வுட் மற்றும் ஃப்ளின்டாப்பால் அவ்வளவு சீக்கிரம் மறந்தவிட முடியாது.  கிங்ஸ்மீட்டில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. சேவக் மற்றும் கம்பீர் இங்கிலாந்து வீரர்களை அதிரடியால் சோதித்தனர். முதல் விக்கெட் விழவே 14.4 ஓவர்களை எடுத்துக் கொண்டது இங்கிலாந்து. இதற்கிடையில் சேவக் அடித்த ஒரு இமாலய சிக்ஸர் இங்கிலாந்து ரசிகரை தாக்கியது.

ஃப்ளின்டாப்பின் 18வது ஓவரில் 4வது மற்றும் 5வது பந்து பவுண்டரிக்கு செல்ல கடுப்பான ஃப்ளின்டாப் களத்தில் இருந்த யுவராஜ் சிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தான் பிரச்னையின் உச்சகட்டம் இவர் வசைபாடாமல் இருந்திருந்தால் அந்த வரலாற்று நிகழ்வு நடக்காமலே போய் இருக்கும்.

19வது ஓவரில் யுவராஜ் எந்த மனநிலையில் எதிர்கொண்டார் என யாராலும் கணிக்க முடியாது. எதிர்முனையில் இருந்த கேப்டன் கூலும் அன்று கூல் மனநிலையை இழந்திருப்பார். ஸ்டுவர்ட் ப்ராட் எனும் இங்கிலாந்தின் முன்னனி பந்துவீச்சாளர் அந்த ஓவரில் ஆறு பந்துகளையும் புதிய உத்தியோடு தான் வீசினார்.

உச்சகட்ட கோபத்தில் இருந்த யுவி, ஆறு பந்துகளையும் எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்பி விஸ்வரூபம் என்றால் என்ன என்பதை காட்டினார். 20 ஓவர் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடிக்கப்பட்டதும், 12 பந்துகளில் அரைசதம் அடித்ததும் இன்று வரை உடைக்க முடியாத சாதனையாகவே உள்ளது.





இந்த போட்டியை இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும். கட்டாயம் அன்றைய இரவு காலிங்வுட், ஃபிளின்டாப் மற்றும் ப்ராட் மறக்கவேண்டிய இரவாகவே அமைந்திருக்கும். யுவராஜ் சிங் ஒரு அக்ரஸிவான ஆட்டக்காரர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அக்ரஸிவ் வீரரின் உச்சம் யுவி தான் என்பதை அன்று நிருபித்தார்.

9 வருடங்கள் ஆகியும் உள்ளூர் போட்டிகளில் கூட இந்த சாதனை முறியடிக்கப்படாமல் உள்ளது. ஸ்லெட்ஜிங் செய்வது எளிது, அதற்கு பதிலடி தருவது யுவி போன்ற வீரர்களால் மட்டுமே முடியும். சமீபத்திய பேட்டியில் கூட யுவராஜ் இதனை திரும்ப செய்ய விரும்பம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.