Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 26, 2016

'நான் நலம்... உள்ளாட்சித் தேர்தல் கவனம்!' ஜெயலலிதாவின் சிக்னல்


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு ஊகங்களும், வதந்திகளும் வந்தவண்ணம் இருக்கின்றன.  அவர் கிரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் இருந்து நாளை(திங்கள்) அல்லது புதன்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



சென்னை, கிரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் இருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் முதல்வரின் அறைக்குள் சசிகலாவும், திவாகரின் மகளும் மருத்துவருமான ராஜமாதங்கியும் உடனிருந்து கவனித்துக்கொள்கிறார்கள்.சசிகலாவின் அண்ணன் மாப்பிள்ளையான டாக்டர் சிவக்குமார் தான் முதல்வரின் ஆஸ்தான மருத்துவர். சிவக்குமாரும், அவரது மகன் டாக்டர் கார்த்திக்கும் அனைத்து மருத்துவ வசதிகளையும் செய்துகொடுத்து வருகிறார்களாம்


மருத்துவமனையில் அவரது அறையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டு இருக்கிறாராம் முதல்வர். தொலைக்காட்சியில் நாய் சம்பந்தமான ஏதோவொரு நிகழ்ச்சி வந்தபோது மட்டும் லேசாக பதற்றம் அடைந்தாராம்.ஜெயலலிதா அவரது வீட்டில் செல்ல நாய்கள் வளர்ப்பது வழக்கம். கடந்த ஆண்டு , சொத்துக்குவிப்பு வழக்கில்  சிறை சென்ற போது. இவரைக் காணாத வருத்தத்தில் இருந்த பிராணிகள், இறந்துவிட்டனவாம். அதன் பின், அவர் செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் பெரிய ஆர்வம் காட்டவில்லையாம்.அது தான் பதற்றத்திற்குக் காரணம் என்கிறார்கள் கார்டன் வட்டாரங்கள்.




அதேபோல், அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு ,தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் கவனம் காட்டும்படியும் உத்தரவிட்டு இருக்கிறாராம் முதல்வர்.ஆகையால், இன்று அப்போலோ மருத்துவமனையில் பெருமளவிலான கூட்டம் எதுவும் இல்லை.வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், டிஸ்சார்ஜ் ஆனதும், தொலைகாட்சி வாயிலாக , அவர் தன் உடல்நிலைக் குறித்து பேச இருக்கிறார் என்கின்றனர்.  நாளை அல்லது புதன்கிழமை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.