August 22, 2016
பேன்ட் ஜிப்பில் YKK எனும் குறியீட்டை எப்போதாவது நீங்கள் கவனித்ததுண்டா?
தினமும் குறைந்தபட்சம் ஆண்கள் ஒருநாளுக்கு ஐந்தில் இருந்து பத்து முறையாவது ஜிப்பை பயன்படுத்தாமல் இருக்க முடியாது.
கையில் பை வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை என்றாலும், பேன்ட் போடும் போது, அவிழ்க்கும் போது, சிறுநீர் கழிக்கும் போது என ஐந்தாறு முறை ஜிப்பை நாம் பயன்படுத்தி தான் ஆகவேண்டும்.
பெரும்பாலான பேன்ட், கைப்பை மற்றும் சில உபகரணங்களின் ஜிப்பில் நீங்கள் இந்த ஒய்.கே.கே. என்ற குறியீட்டை பார்த்திருப்பீர்கள்.
ஆனால், இது எதை குறைக்கிறது, இது உலகளவில் எவ்வளவு பெரியது என்பது குறித்து நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான்…
ஜிப்பில் இருக்கும் இந்த YKK எனும் குறியீடு ‘Yoshida Kogyo Kabushikigaisha’ எனும் உலகின் முன்னணி ஜிப் தயாரிப்பு நிறுவனத்தை குறிப்பது ஆகும்.
ஏறத்தாழ உலகில் தயாரிக்கப்படும் ஜிப்பில் பாதிக்கும் மேல் இந்த நிறுவனத்தார் தான் தயாரிக்கின்றனர். உலகெங்கிலும் 71 நாடுகளில் இவர்கள் 206 தயாரிப்பு இடவசதி வைத்துள்ளனர்.
ஜப்பானை சேர்ந்த தொழிலதிபர் தடோ யோஷிடா என்பவர் தான் இந்த மாபெரும் ஜிப் தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 1934-ம் ஆண்டு துவங்கினார். உடைகள் மற்றும் ஏனைய ஜிப் தேவைப்படும் பொருட்கள், உபகரணங்களுக்கு இவர்கள் ஜிப் தயாரிக்கின்றனர்.
ஜிப்புகள் மட்டுமின்றி, ஜிப்பை வேகமாக தயாரிப்பு தேவைப்படும் மெஷின்களும் கூட ஒய்.கே.கே நிறுவனம் தயாரிக்கிறது.
ஒய்.கே.கே-வின் பெரிய தயாரிப்பு ஃபேக்டரி அமெரிக்கவின் ஜியார்ஜியாவில் அமைந்துள்ளது. இங்கு மட்டுமே ஒரு நாளுக்கு 70 லடச்திற்கும் மேற்பட்ட ஜிப்புகள் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பேன்ட் ஜிப்பில் YKK எனும் குறியீட்டை எப்போதாவது நீங்கள் கவனித்ததுண்டா?
Reviewed by மறத்தமிழன்
on
August 22, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 22, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.