Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 18, 2016

யமுனைக் கரையை நாசம் செய்தது உண்மையே!' - அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை!


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு, கடந்த மார்ச் மாதம் யமுனை நதிக்கரையில், 'உலகக் கலாசாரத் திருவிழா' என்ற 3 நாட்கள் நிகழ்ச்சியை நடத்தியது. "இது யமுனை ஆற்றங்கரையை மாசுபடுத்தும் செயல்" என அப்போதே, எதிர்ப்பு தெரிவித்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். இதை ஆராய மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சசி சேகர் தலைமையில், 7 பேர் கொண்ட குழுவையும் அமைத்திருந்தது. தற்போது இந்தக் குழு, நிகழ்ச்சி நடந்த இடத்தை ஆராய்ந்து தந்துள்ள அறிக்கைதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மத்தியில், பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.


"நிகழ்ச்சி நடந்த யமுனையின் மொத்த நதிக்கரையும், முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. சேதம் என்பது சிறிய அளவில் கிடையாது. அந்த இடத்தில் இருந்த தாவரங்களான, மரங்கள், செடிகள் என எல்லாமே அழிக்கப்பட்டுள்ளது.அந்த நிலம் சமமாக, இறுக்கமாக மாற்றப்பட்டுள்ளது. மொத்த சேதங்களை கணக்கிடவே முடியாது. அழிந்த பெரும்பாலான தாவரங்களை மீட்கவும் முடியாது." என 47 பக்கங்களில் அந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது நிபுணர் குழு.

             
     

தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில், நிபுணர் குழு தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வாழும் கலை அமைப்பு, " இந்த அறிக்கை அறிவியல் பூர்வமானது அல்ல" என விமர்சித்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்,  "நிபுணர் குழுவின் அறிக்கை கண்மூடித்தனமானது. நடுநிலைமை அற்றது. இதனை எதிர்த்து நாங்கள் போராடுவோம். செயற்கைகோள் படங்களும், அறிவியலும் எப்போதும் பொய் சொல்லாது" எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.