ஆண்களின் ஆதிக்கமே பிரதானமாக இருக்கும் தேர்தல் அரசியலில், பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருந்தாலும், வாய்ப்புக் கிடைத்த பெண்கள் தங்களுக்கான பணிகளில் மெச்சத்தக்க சாதனைகளைச் செய்திருக்கின்றனர். குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின்போதும், கட்சிக் கூட்டங்களிலும், ஆர்பாட்டங்களில் மட்டுமே பெண்களின் பங்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. நாடாளுமன்ற, சட்டமன்றக் களத்திலும் பெண்களுக்கான பிரச்னைகளுக்கும், மற்ற பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்க எந்த அரசியல் கட்சிகளும் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதில்லை. ஆண்களே நீ, நான் என அடித்துக்கொள்ளும் தேர்தல் அரசியல் களத்தில், இந்தியா சுதந்திரம் பெற்ற காலம் முதல் தற்போது வரை பெண்களின் பங்களிப்பு எத்தகைய அளவில் இருந்துள்ளது என்பதை விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
நாடாளுமன்றத்தில்:
* தற்போதைய மத்திய அரசின் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மொத்தம் உள்ள 75 அமைச்சர்களில், 8 பெண் அமைச்சர்கள் மட்டுமே உள்ளனர்.
* மக்களவையின் முதல் பெண் சபாநாயகராக மீரா குமார் (2009-2014), தற்போதைய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் (2014-லிருந்து) என இரண்டு பெண் சபாநாயகர்கள் இடம்பெற்றுள்ளனர்.
* தற்போதைய நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தமுள்ள 243 உறுப்பினர்களில், 26 பேர் மட்டுமே பெண் உறுப்பினர்கள்.
* சுதந்திர இந்தியாவில் பிரதமராகப் பதவி வகித்த ஒரே பெண், இந்திராகாந்தி மட்டுமே. இவர், 1966-1977 வரை 11 ஆண்டுகள் 59 நாட்களும், 1980-1984 வரை 4 ஆண்டுகள் 291 நாட்களும் என இரண்டு முறை பிரதமராக இருந்திருக்கிறார்.
* சுதந்திர இந்தியாவில் 1951-ம் ஆண்டு நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலில், திருவள்ளூர் தொகுதியில் வெற்றிபெற்று, தமிழகத்தின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை மத்திய அமைச்சராகவும் இருந்தார், மரகதம் சந்திரசேகர்.
* இந்தியாவை விட குறைவான மக்கள் தொகைகொண்ட பாகிஸ்தான், வங்கதேச நாடுகளைவிடவும், நம் இந்திய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைவு.
தமிழ்நாடு சட்டமன்றத்தில்:
* மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, சென்னை மாகாணத்துக்கு (இன்றைய தமிழ்நாடு) 1957-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் காமராஜர் இரண்டாவது முறையாக முதல்வரானார். காமராஜரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஏழு அமைச்சர்களில், கன்னியாகுமரியைச் சேர்ந்த லூர்தம்மாள் மட்டுமே பெண். உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த லூர்தம்மாள்தான், சுதந்திரம் பெற்ற பிறகு தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
* 1962-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காமராஜர் மூன்றாவது முறையாக முதல்வரானபோது, அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற 8 அமைச்சர்களில், சுகாதாரம், மகளிர், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக இருந்த ஜோதி வெங்கடாச்சலம் மட்டுமே பெண்.
* 1967-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அண்ணாதுரை முதல்வரானபோது, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தார் சத்தியவாணிமுத்து. இவரே 1969-ம் ஆண்டு சுகாதாரம், பெண்கள் நலன் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகவும் இருந்தார். தமிழகத்தில் இதுவரை, ஒற்றை இலக்கங்களிலேயே பெண் அமைச்சர்கள் இருந்துள்ளனர்.
* தமிழகத்தின் முதல் பெண் முதல்வராக 1988-ம் ஆண்டில் ஜானகி ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்) பொறுப்பேற்றார். அடுத்து 1991-ல் ஜெயலலிதா முதல்வரானார்.
* அடுத்து 1991-ல் ஜெயலலிதா முதல்வரானார். பின்னர் இவரே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, ஆறாவது முறையாக தமிழக முதல்வரானார்.
* தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், 32 பேர் கொண்ட அமைச்சர்களில் நான்கு பேர் மட்டுமே பெண் அமைச்சர்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.