Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 25, 2016

மகப்பேறுக்கு எப்படி உதவுகிறது போலிக் ஆசிட்


கர்ப்பம் தரிப்பதில் தாமதம் என்று மருத்துவரைப் பார்க்க செல்லும், பெண்கள் பலருக்கு மருத்துவர்கள் போலிக் ஆசிட் மாத்திரைகளைப் பரிந்துரை செய்கின்றனர். அதன் காரணம், தேவை பற்றி சென்னையைச் சேர்ந்த பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர் மைதிலி சொல்லும் தகவல்கள்...

பொதுவாக இன்றைய பெண்களுக்கு வைட்டமின் பி (B) குறைவாக உள்ளது. இதனால் ரத்தசோகை ஏற்படுவதோடு மகப்பேறு பிரச்னைகளும் உருவாகிறது. இன்று சுமார் 90 சதவீதம் பெண்களுக்கு முதல் குழந்தை கருகலைப்பு, குழந்தை வளர்ச்சி இல்லை அல்லது கரு உண்டாவதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

போலிக் ஆசிட் மாத்திரையில் வைட்டமின் பி சத்து அதிகமாக உள்ளதால் பெண்களுக்கு மருத்துவர்கள் இதனைப் பரிந்துரை செய்கின்றனர். கர்‌ப்பக் கால‌த்‌தி‌ல் குழ‌ந்தை‌யி‌ன் வள‌ர்‌ச்‌சி‌க்காகவு‌ம், தா‌யி‌ன் இர‌த்த அளவு அ‌திக‌ரி‌க்கவு‌ம், குழந்தையின் டி.என்.ஏ வளர்ச்சிக்கும் போலிக் ஆசிட் அவசியமானது.

போலிக் ஆசிட் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோனையைப் பெற்று திருமணத்திற்கு மூன்று மாதத்திற்கு முன்பு இருந்தாவது சாப்பிட ஆரம்பித்தால் குழந்தை பேறில் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்கலாம்.

போலிக் ஆசிட் மாத்திரைகள் மகப்பேறுக்கான மாத்திரை மட்டும் இல்லை. சில பெண்களுக்கு ஹீமோகுளோபினின் அளவு இயல்பிலேயே குறைவாக இருக்கும். இதனை இரும்புச் சத்து மாத்திரைகளால் மட்டும் சரி செய்துவிட முடியாது. அப்படிப்பட்ட பெண்கள், மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது அவசியம். இது அவர்களை இரத்த சோகை பிரச்னையில் இருந்து காக்கும். மேலும் ஹீமோகுளோபினின் அளவு குறைவாக இருக்கும் பட்சத்தில், அது கண்டறியப்பட்டதில் இருந்தே போலிக் ஆசிட் மாத்திரைகளைச் சாப்பிட ஆரம்பிப்பது நல்லது.





ஹீமோகுளோபினின் அளவு இயல்பிலேயே குறைவாக இருந்து அனிமீக்காக இருப்பவர்களில், 3 வயது குழந்தைகளுக்கு 25 -100 மைக்ரோ கிராம் அளவில், 4 முதல் 6 வயது குழந்தைகள் 75 - 400 மைக்ரோ கிராம் அளவிலும், 13 வயதிற்கு பிறகு 150 - 400  மைக்ரோ கிராம் அளவிலும், கர்ப்பிணி பெண்கள் 400 - 800  மைக்ரோ கிராம் அளவிலும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் 260 - 800  மைக்ரோ கிராம் அளவிலும் போலிக் ஆசிட்டை கொடுப்பது நல்லது.

1000 மைக்ரோ கிராம் அளவிற்கு மேல் நீங்கள் போலிக் ஆசிட்டை எடுத்துக்கொள்கிறீர்கள் எனில் மூடிக்கொட்டுதல் பிரச்னை, உடலில் சர்க்கரையின் அளவு குறைதல், குறைந்த இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படலாம்.

சிறுவயதில் இருந்தே காய்கறிகள், பசலைக்கீரை, பீன்ஸ், புருக்கோலி, பப்பாளி, ஆரஞ்சு, ஈஸ்ட், லெட் யூஸ், முளைக்கட்டிய பயறு, சிக்கன் வகைகளைக் கொடுப்பதால் இந்தப் பிரச்னைகளில் இருந்து மாத்திரைகள் இல்லாமலே தீர்வு காணலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.