சட்டசபையில் இன்று ஆதிதிராவிடர் துறையின் மானியக்கோரிக்கை நடைபெற்றது. கடந்த 17ம் தேதி சட்டசபையில் இருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற்றபட்ட பிறகு இன்று தான் தி.மு.க உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு வந்ததால்,சட்டமன்ற வளாகமே பரபரப்புடன் காணப்பட்டது. தி.மு.க உறுப்பினர்கள், வெளியேற்றம் செய்த பிறகு தர்ணாவில் ஈடுபட்டதும், போட்டி சட்டமன்றம் நடத்தியதும், ஆளும் கட்சிக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால், சஸ்பெண்ட் செய்யபட்ட தி.மு.க உறுப்பினர்கள் சட்டசபை வளாகத்திற்குள் வராத அளவிற்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டு இருந்து, இந்நிலையில் இன்று சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள தி.மு.கவினர், தங்கள் கார்களில் வந்தபோது, சட்டமன்ற வளாகத்திற்கு முன்பே அவர்களின் கார்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர் காவல்துறையினர். தி.மு.க உறுப்பினர்கள் “ நாங்க எம்.எல்.ஏ எங்கள் காரையும் சோதனை செய்கின்றீர்களா? ”என்று சோதனையில் ஈடுபட்ட காவலர்களிடம் எகிற சாரி சார் எங்களுக்கு மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவு அதை தான் செல்கின்றோம், என்று பவ்வியம் காட்டினர் காவலர்கள்.
இந்த விவகாரம் சட்டமன்றத்திலும் ஒலித்தது. இன்று காலை சட்டமன்றம் கூடியவுடன்,எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து “ இங்கு என்ன நடக்கிறது.இது சட்டமன்றம் தானா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எம்.எல்.ஏகளின் கார்களையும் வழிமறித்து சோதனை செய்கின்றார்கள். சட்டமன்ற வளாகத்திலே பாதுகாப்பு இல்லாத அளவிற்கு தான் என்று..’ ஒரு வார்த்தையை குறிப்பிட்டு ’ கூறினார். அதற்கு பதில் அளித்த சபாநாயகர் “ இங்குள்ள அனைத்து உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக தான் இந்த சோதனை நடைபெறுகிறது. காவல்துறைக்கு வந்த ரகசிய தகவல் ஒன்றால் தான் இந்த சோதனை நடைபெறுகிறது என்றவர் துரைமுருகன் பேச்சில் இருந்து அந்த ஒரு வார்த்தையை மட்டும் சபை குறிப்பிலிருந்து நீக்கிவிட்டதாக அறிவிக்க அதற்கு தி.மு.க வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.கவினரின் மீது இருந்த அச்சம் காரணமாக தான் இந்த பாதுகாப்பே போடப்பட்டது என்பதை மறைமுகமாக சபாநாயகர் சுட்டிகாட்டியபோது சபையில் சிரிப்பலையை எழுந்தது..
இன்று கேள்வி நேரத்தின் போது பள்ளி கல்விதுறை தொடர்பான கேள்வி ஒன்றை உறுப்பினர் ஒருவர் எழுப்பினார். இதற்கு பள்ளி கல்விதுறை அமைச்சர் பதில் சொல்லவேண்டும். ஆனால் நேற்று மாலை பள்ளி கல்வி துறை அமைச்சர் பென்ஜமின் மாற்றப்பட்டு,அந்த துறைக்கு புதிய அமைச்சராக பாண்டியராஜன் நியமிக்கபட்டுள்ளார். இன்று மாலை தான் அவர் பதவியேற்க இருந்ததால், அமைச்சர் இல்லாத துறையாக தான் அந்த துறை இருந்ததது.எனவே அந்த கேள்விக்கு சபாநாயகர் “ இந்த கேள்வியை நாளை கேள்வி நேரத்தில் எடுத்துகொள்கிறேன் என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.