Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 23, 2016

வெள்ளை முட்டை... பிரவுன் முட்டை எது பெஸ்ட்?


கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது நம் தாத்தா காலத்துக் குழப்பம்... இது ஒருபுறம் இருக்க சூப்பர் மார்க்கெட்டில் வெள்ளை நிற முட்டைகளை ஒரு டிரேவிலும், பிரவுன் நிற முட்டைகளை இன்னொரு டிரேவிலும் வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். காலங்காலமாய் வெள்ளை முட்டைகளைச் சாப்பிட்டு பழகிய நமக்கு, பிரவுன் முட்டைகள் கோழி முட்டைகள்தானா என்றோர் சந்தேகம் வரும். சிலர் "பிரவுன் முட்டைகள்தான் விலை அதிகம். எனவே, அதில்தான் சத்துக்கள் அதிகம்" என்பார்கள். இதெல்லாம் உண்மைதானா? எப்படி சரியான முட்டையை வாங்குவது, எது சரியான முட்டை என குழப்பம் இருக்கும்.   இதுகுறித்து சென்னை, கோழி இன ஆராய்சி நிலையத்தின் பேராசிரியர் ஏ.வி.ஓம்பிராகாஷ் அவர்களிடம் இதுபற்றி கேட்டோம்.

இதெல்லாம் கோழியைப் பொருத்த விசயம் பாஸ்!

முட்டை, வெள்ளை நிறம், பிரவுன் நிறம் என்பன எல்லாம் கோழிகளைப் பொருத்த விசயங்கள். பொதுவாக, வெள்ளை லெக்கான் இனத்தைச் சார்ந்த கோழிகள் வெள்ளை முட்டைகளையும், செந்நிற கொண்டைகள் கொண்ட அமெரிக்கன், இங்கிலீஷ், ஏசியின் கோழியின வகைகள் பிரவுன் முட்டைகளையும் இடுகின்றன. (நாட்டுக்கோழிகள் சற்றே பழுப்பு நிறமான வெள்ளை முட்டைகள் இடுபவை, அதனால்தான் கலப்படக்காரர்கள் அளவில் சற்று பெரிய பிராய்லர் கோழி முட்டைகளை, டீத்தூள் டிகாக்‌ஷனில் முக்கி, நாட்டுக்கோழி முட்டைகள் என விற்கின்றனர்) மற்றபடி, பிரவுன் முட்டைகளோ வெள்ளை முட்டைகளோ இதன் ஊட்டச்சத்து மதிப்பில் எந்த வித்யாசமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



"அப்படியானால், பிரவுன் முட்டைகள் ஏன் விலை அதிகமாக உள்ளன?"

"பிரவுன் முட்டைகள் வெள்ளை முட்டைகளைவிடவும் அளவில் சற்று பெரியவை. எனவே, அதன் விலையும் அதிகமாக உள்ளது அவ்வளவே."

"முட்டை ஓடுகளில் வித்யாசங்கள் உள்ளனவா?"

"நிறத்தைத் தவிர வெள்ளை முட்டையின் ஓட்டுக்கும், பிரவுன் முட்டையின் ஓட்டுக்கும் எந்த வித்யாசமும் இல்லை. சிலர், பிரவுன் முட்டையின் ஓடுகள் தடிமனானவை என்பார்கள். இதுவும் தவறு. அளவில் சற்றுப் பெரியவையே தவிர, தடிமனில் வித்யாசம் கிடையாது."

                                                                                   

"மஞ்சள் கருவில் வேறுபாடு இருக்குமா?"

"இருக்காது. சிலர் பிரவுன் முட்டைகளின் மஞ்சள்கரு, வெள்ளை முட்டைகளைவிடவும் மஞ்சளாக இருக்கும் என்பார்கள். இது தவறு. பொதுவாக, கோழி சாப்பிடும் உணவுக்கும் அதன் மஞ்சள்கருவுக்கும் மட்டுமே தொடர்பு உண்டு. அதாவது, மக்காச்சோளம்,  சேந்தோபில் நிறமிகள், கீரை வகைகள், கீழா நெல்லி, அசோலா, போன்றவற்றைத் தீவனத்தில் கலந்து அளிக்கும்போது கருவின் மஞ்சள்தன்மை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மற்றபடி, கோழி முட்டையின் ஓட்டின் நிறத்துக்கும் மஞ்சள்கருவின் நிறத்துக்கும் தொடர்பு இல்லை."

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.