Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 6, 2016

துயில் எழுப்பும் சீக்ரெட்.... இத்தனை சுவாரசியங்களா??


அவசரமாக வேலைக்கு செல்லும் பெண்மணிகள் தன் குழந்தைகளை எழுப்பி பள்ளிக்கு கிளப்புவதற்குள் ஒரு வழி ஆகிவிடுவார்கள். நேரம் காலம் தெரியாம உயிர வாங்காத., எழுந்து ரெடி ஆகு என்று காலை வேலையே நம்மை துரத்த ஆரம்பிகிறது. இப்படி திட்டி கொண்டே எழுப்புவதால் நமக்கும் டென்ஷன் குழந்தைகளுக்கும் டென்ஷன் எதுக்கு இந்த டென்ஷன்?

நன்றாக தூங்கி கொண்டிருக்கும் குழந்தைகள் பக்கத்தில் சென்று தலையை விரலால் வருடிவிட்டு செல்லமாக அணைத்து நெற்றியின் முத்தமிட்டு, உனக்கு புடிச்ச டிஷ் வேணும்னா எழுந்துக்கோ!! என்று செல்லமாக எழுப்பி விடுங்கள். பின் பாருங்கள் உங்கள் வார்த்தை மற்றும் செயல்களே உங்கள் குழந்தைகளுக்கு பூஸ்ட் ஆகி விடும். உங்கள் குரலில் தினமும் ‘குட்மார்னிங்’ கண்ணா! என்று உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகித்து பாருங்கள் பின் நீங்களும் ப்ரெஷ் குழந்தைகளும் ப்ரெஷ் தான்..

அதை விட்டு காலையிலே சோம்பேறி என்று திட்டிகொண்டு இருந்தால் கண்களை மட்டுமல்ல காதுகளையும் மூடி கொள்ள தான் தோணும்... குழந்தைங்களின் பழக்கத்தை மாற்ற முதலில் நாம் மாறி கொள்ளலாமே!!!!! என்ன பெற்றோர்களே ரெடியா??

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.