துருக்கியில் திருமண விழா ஒன்றில் 12 வயது சிறுவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கும் ஐ.எஸ் அமைப்பு தான் காரணம் என துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
சிரியா- துருக்கி எல்லைப்பகுதியில் குர்திஷ் இன மக்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். ஐ.எஸ் இயக்க ஜிகாதிகள், குர்திஷ் மக்களை எதிரிகளாகப் பாவித்து வருகின்றனர். சிரியாவை தங்களது ஆளுமைக்கு கீழ் கொண்டுவர உள்நாட்டு போரில் ஐ.ஸ் இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ் இயக்கத்தை எதிர்த்து போராடும் அரசு ராணுவத்தில், குர்திஷ் இன ஆண்களே பெரும் பங்காற்றி வருகின்றனர். இது ஐ.எஸ் இயக்கத்தினருக்கு குடைச்சலாக இருந்ததுடன், அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது.
இந்நிலையில் குர்திஷ் இனமக்களைப் பழிவாங்க நேரம் பார்த்துக்கொண்டிருந்த ஐ.எஸ் இயக்கத்தினர், துருக்கியில் நடந்த ஒரு திருமண நிகழ்வைக் குறிவைத்தனர். குர்திஷ் இனத்தைச் சேர்ந்த பேசனா- அக்டாகன் ஆகிய ஜோடியின் திருமண நிகழ்வு கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. இந்தத் திருமணத்திற்கு விருந்தாளி போல நுழைந்தான் 12 வயதான ஐ.எஸ் இயக்க சிறுவன் ஒருவன். யாருக்கும் சந்தேகம் வராதபடி அமைதியாக இருந்த அச்சிறுவன், திடீரென அங்கு வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தினான். அத்தாக்குதலில் 51 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 94பேர் கடும் காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். திருமண ஜோடி இருவரும் காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர்.
சிகிச்சை பெற பிறகு பேசிய மணப்பெண் பேஷனா,''அவர்கள் எங்கள் திருமண நிகழ்வை ரத்தக்களரியா மாற்றிவிட்டனர்'' என மனம் நொந்துள்ளார். ஐ.எஸ் இயக்கத்தினரின் இந்தப் பழிவாங்கும் தாக்குதலால், சிரியாவில் இருந்து அமைதி தேடி துருக்கிக்கு வந்த அகதிகளும், துருக்கு மக்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த ஒரு வருடங்களாக துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள குர்திஷ் மக்கள் மீது ஐ.எஸ் இயக்கத்தினர் பல முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். இனி ஐ.எஸ்-ஐ அழிக்க குர்திஷ் ராணுவத்தினர் இன்னும் தீவிரமாகக் களம் இறங்கலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.