Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 16, 2016

ஓவியங்களால் மிளிரும் திருச்சி பாலக்கரை பாலம்! - துாரிகைகளால் அசத்திய மாணவர்கள்


மேம்பாலம் என்றாலே அரசியல் மற்றும் சினிமா சுவரொட்டிகளை ஒட்டி, பாலம் இருக்கிறதா, இல்லையா என்பதையே அறிய முடியாத அளவுக்கு பாலத்தின் சுவர்களை வீணாக்கி, அழுக்காக்கி மறைத்து விடுவார்கள். திருச்சி பாலக்கரை பாலமும் இதில் விதிவிலக்கல்ல.

நேற்றுவரை பொலிவிழந்து முகம் சுளிக்கும் வகையில் இருந்த இந்த பாலம், இன்று பளபள ஓவியங்களால் அந்த வழி கடப்பவர்களை ஒரு சில நிமிடங்கள் நின்று பார்க்க வைக்கிறது. இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள், திருச்சி பிஷப் பள்ளி மாணவர்கள். பாலத்தை தூய்மைப்படுத்தி அதில் பெயிண்ட் அடித்து வண்ண மயமான ஓவியங்களை வரைந்து அசத்தியிருக்கிறார்கள் இவர்கள்.

தங்களுடைய ஓவிய ஆசிரியர், துரையின் வழிகாட்டுதலில் மாநகராட்சியிடம் அனுமதி பெற்று பாலக்கரை மேம்பாலம் பக்கவாட்டு சுவரில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களுடன் இவர்கள் வரைந்த ஓவியங்கள் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.



குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, மரம் வளர்ப்போம், புவி வெப்ப மயமாதல், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், சாலை விபத்தை தவிர்ப்போம், புகை பிடிக்காதீா், மது அருந்தாதீர், இயற்கை காப்போம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் ஓவியமாக தீட்டியுள்ளார்கள்.

“ இந்த வாய்ப்பு எங்களுக்குள் சமூக அக்கறை ஏற்படுத்தியிருக்கிறது  மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லும் வகையில் எங்கள் ஓவியம் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலர்கள் பாராட்டிச் செல்வது உத்வேகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது ” என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு நிஜத்தில் உயிர்கொடுக்க ஆரம்பித்துள்ள மாணவர்களின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது!

கலக்குங்க பாய்ஸ்.....

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.