தமிழ்நாடு பிரிமியர் லீக் (TNPL) தொடரின் முதல் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்கு எதிராக, தினேஷ் கார்த்திக் அதிரடியாக அரைசதம் அடித்து, தூத்துக்குடி (டூட்டி ) பேட்ரியாட்ஸ் அணியை வெற்றி பெறச் செய்தார்.
தமிழகத்தின் இளம் வீரர்களுக்கான தேடலாக கருதப்படும் டிஎன்பிஎல் தொடர் சென்னையில் நேற்று தொடங்கியது. சேப்பாக் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ், ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டூட்டி பேட்ரியாட்ஸ் முதலில் பேட் செய்தது.
வாஷிங்டன் சுந்தர், கவுசிக் காந்தி ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களம் புகுந்தனர். தமிழ்குமரன் பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸர் விளாசி இந்த தொடரின் முதல் சிக்ஸரை அடித்தார் கவுசிக் காந்தி. அதே சூட்டோடு அவர் யோ மகேஷ் பந்தில் ஒரு சிக்ஸர் விளாசினார். ஆனால், கவுசிக் 20 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து களம் புகுந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆரம்பத்தில் நிதானமாக ஆடினார். அவருடன் ஒத்துழைந்த வாஷிங்டன் சுந்தர் 24 ரன்களில் பெவிலியின் திரும்பினார். மாருதி ராகவ் (13 ரன்) நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
மறுமுனையில் நிதானமாக ஆடிக் கொண்டிருந்த தினேஷ் கார்த்திக், அந்தோனி தாஸ் பந்தில் ஒரு புல் ஷாட் மூலம் சிக்ஸர் அடிக்க மைதானம் ஆர்ப்பரித்தது. அவருடன் ஜோடி சேர்ந்த சுஷில் தன் பங்குக்கு சாய் கிஷோர் பந்தில் இறங்கி வந்து லாங் ஆன் திசையில் சிக்ஸர் பறக்க விட்டார். ஆனால், சுஷில் 25 ரன்கள் எடுத்திருந்தபோது விக்கெட்டை பறிகொடுத்தார்.
தமிழ்குமரன், யோ மகேஷ் வீசிய கடைசி இரண்டு ஓவர்களில் தினேஷ் கார்த்திக் வெளுத்து வாங்கினார். அந்த இரண்டு ஓவர்களில் கார்த்திக் மூன்று சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாச, டூட்டி பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. சேப்பாக் கில்லிஸ் தரப்பில் கேப்டன் சதீஷ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய சேப்பாக் கில்லிஸ் அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறியது. எல்.பாலாஜி, அஸ்வின் கிறிஸ்ட், அவுசிக் ஸ்ரீனிவாஸ் என ரஞ்சி நட்சத்திர பட்டாளம் மட்டுமல்லாது ஆகாஷ் சும்ராவும் சேர்ந்து பவுலிங்கில் மிரட்ட, சேப்பாக் கில்லிஸ் ரொம்பவே தடுமாறியது. சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் கோபிநாத் 11 ரன், யோ மகேஷ் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அந்த அணியில் தலைவன் சற்குணம் மட்டுமே அதிகபட்சமாக 29 ரன்கள் அடித்தார்.

சரவணன் (19), அந்தோனி தாஸ் (14) இருவரும் தங்கள் பங்குக்கு சிறிது நேரம் சமாளித்தனர். ஒரு கட்டத்தில் சதீஷ் மற்றும் ராகுல் அடுத்தடுத்து டக் அவுட்டில் வெளியேற, எல்.பாலாஜி ஹாட்ரிக் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தோனி தாஸ் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. அடுத்து களமிறங்கியவர்கள் யாரும் அதிரடியாக ஆடவில்லை.
முடிவில் 19.4 ஓவர்களில் சேப்பாக் கில்லிஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், டூட்டி பேட்ரியாட்ஸ் அணி 45 ரன்களில் வெற்றிபெற்றது. தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.