தமிழகத்தில் தொழிற்சாலைகள் யார் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து சட்டசபையில் தி.மு.க.- அ.தி.மு.க. இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
தி.மு.க. உறுப்பினர்
தமிழக சட்டசபையில் தொழிலாளர் துறை மானியக் கோரிக்கை மீது தி.மு.க. உறுப்பினர் தா.மோ. அன்பரசன்(ஆலந்தூர் தொகுதி) பேசினார்.
அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:
தா.மோ. அன்பரசன்:- 1969-ம் ஆண்டு தொழிலாளர்களுக்கு என்று தனி அமைச்சகத்தை உருவாக்கியவர் கருணாநிதி. 2006-2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி ரூ.1 லட்சம் கோடி அன்னிய முதலீடுகளை கொண்டு வந்தார். 8 லட்சம் இளைஞர்கள் நேரடியாகவும், 11 லட்சம் இளைஞர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றனர். தமிழகத்தில் தொழிற்புரட்சியை கருணாநிதி ஏற்படுத்தினார்.
(பின்னர் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தொழில் நிறுவனங்களையும், முதலீடுகளையும் பட்டியலிட்டு தா.மோ. அன்பரசன் பேசிக்கொண்டிருந்தார்.)
அமைச்சர்கள் பதில்
அப்போது அமைச்சர்கள் குறுக்கிட்டு பேசியதாவது:
அமைச்சர் எம்.சி.சம்பத் (தொழில் துறை):- உறுப்பினர் தவறான தகவலை அவையில் பதிவு செய்கிறார். தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.23 ஆயிரத்து 288 கோடி அன்னிய முதலீடு தான் கொண்டு வரப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் ரூ.85 ஆயிரத்து 53 கோடி அன்னிய முதலீடு கொண்டு வரப்பட்டது.
அமைச்சர் தங்கமணி (மின்சாரத்துறை):- தி.மு.க. ஆட்சியில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் பெயர் பட்டியலை அளிக்க தயாரா?. உங்கள் ஆட்சியில் தான் மின்சாரமே இல்லையே.
அமைச்சர் நிலோபர் கபில்(தொழிலாளர் நலத்துறை):- தி.மு.க. ஆட்சியில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையில் 17 நிறுவனங்கள் நிதி நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ளன.
அமைச்சர் மணிகண்டன்(தகவல் தொழிற்நுட்பம்):- டி.சி.எஸ், விப்ரோ, இன்போசீஸ், எச்.சி.எல். போன்ற ஐ.டி. தொழிற்சாலைகள் அ.தி.மு.க. ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டன.
நோக்கியா, பாக்ஸ்கான்
தா.மோ. அன்பரசன்:- 1998-ம் ஆண்டு சிறுச்சேரியில் ஐ.டி. தொழிற்சாலைகளை மு.க.ஸ்டாலின் தான் திறந்து வைத்தார்.
அமைச்சர் ஜெயக்குமார்(மீன்வளத்துறை):- ரூ.25 ஆயிரம் கோடி முதலீட்டில் 10 ஐ.டி. கம்பெனிகளை சிறுச்சேரியில் அம்மா (ஜெயலலிதா) கொண்டு வந்தார்.
தா.மோ. அன்பரசன்:- மறைமலைநகரில் இயங்கி வந்த போர்டு கார் கம்பெனி 2015-ம் ஆண்டு குஜராத் மாநிலத்துக்கு சென்றுள்ளது...
அமைச்சர் தங்கமணி:- தமிழகம் தொழில் செய்வதற்கான பாதுகாப்பான இடம் என்று போர்டு கம்பெனி நிறுவனம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியது. தமிழகத்தில் கார் விற்பனை 10 சதவீதம். வெளிமாநிலங்களில் 30 சதவீதம் நடக்கிறது. வடகிழக்கு பகுதிக்கு லாரி மூலம் கார்களை கொண்டு செல்ல ஒரு காருக்கு வாடகையாக ரூ.20 ஆயிரம் செலவாகிறது. எனவே தான் மாற்றப்பட்டுள்ளது. எனினும் முழுவதுமாக செல்லவில்லை.
தா.மோ.அன்பரசன்:- காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிய நோக்கியா நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
பாக்ஸ்கான் கம்பெனி மராட்டிய மாநிலம் நவிமும்பைக்கு சென்றுவிட்டது.
அமைச்சர் தங்கமணி:- அதற்கு நீங்கள்(தி.மு.க. ஆட்சி) தான் காரணம். மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தபோது நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை.
கெட்டது நடந்தால்...
தா.மோ. அன்பரசன்:- நல்லது நடந்தால் உங்கள்(அ.தி.மு.க.) ஆட்சியில் என்கிறீர்கள். கெட்டது நடந்தால் கருணாநிதி ஆட்சியில் என்கிறீர்கள். மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலையை திறக்க வேண்டும்.
அமைச்சர் நிலோபர் கபில்:- நோக்கியாவில் பணிபுரிந்த 7 ஆயிரத்து 580 தொழிலாளர்களுக்கு தொழிலாளர் ஆணையம் இருதரப்பு ஒப்பந்தத்தின் படி ரூ.10 லட்சம் பண பயன் வழங்கி உள்ளது.
துரைமுருகன்(எதிர்க்கட்சி துணை தலைவர்):- அமைச்சர்கள் தங்கள் இலாகா குறித்து பதில் சொல்கிறார்கள். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் உறுப்பினர் பேசும் போது வரிக்கு வரி அமைச்சர்கள் குறுக்கீடுவதா? இப்படி பேசினால் பேசுகிற உறுப்பினர் எப்படி தொடர்ச்சியாக பேச முடியும்?. உறுப்பினர் பேசுவதை குறிப்பெடுத்து, உறுப்பினர் பேசி முடித்த பிறகு அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டும்.
அமைச்சர் நிலோபர் கபில்:- தவறான கருத்து சொல்வதை ஏற்க முடியாது.
சுமங்கலி திட்டம்
தா.மோ.அன்பரசன்:- சுமங்கலி திட்டம், மாங்கல்ய திட்டம் என்று இளம்பெண்கள் 3 ஆண்டுகள் ஆலைகளில் கொத்தடிமைகள் போல் தங்க வைக்கப்படுகின்றனர். 12 மணி நேரம் வேலை வாங்கப்படுகிறது. அவர்களுடைய உழைப்பு சுரண்டப்படுகிறது.
(அப்போது கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளிக்க எழுந்தார். அவரது குறுக்கீட்டுக்கு எதிராக தி.மு.க. உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் சபாநாயகர் தனபால் சமாதானம் செய்தார்.)
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:- தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் கொத்தடிமை என்ற வார்த்தைக்கே இடம் இல்லை. திருப்பூர் பின்னல் ஆலைகளில் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு, கடமை ஆலை நிறுவனங்கள் செய்து வருகின்றன.
இளம்பெண்கள் தங்குவதற்கு விடுதிகளில் முழு வசதியும், தொலைதொடர்பு வசதியும் உள்ளது. பணி செய்கிற இடத்தில் யாரும் சந்திக்க முடியாமல் இருந்தால் தான் அது கொத்தடிமை. வெளி உலகுடன் தொடர்பில் இருப்பவர்கள் கொத்தடிமை இல்லை. எனவே கொத்தடிமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
தா.மோ. அன்பரசன்:- 3 ஆண்டுகள் முடிவில் குறைந்த தொகை தான் ஒதுக்கப்படுகிறது. எந்த தொழில் பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை.
அமைச்சர் நிலோபர் கபில்:- சுமங்கலி திட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தால் இறுதி உத்தரவு வழங்கப்பட்டது. மாவட்ட கண்காணிக்குழு பரிந்துரையை பரிசீலித்து 1946-ம் ஆண்டு தொழில் நிறுவன சட்டத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேற்கண்டவாறு விவாதம் நடந்தது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.