தமிழக சட்டப்பேரவையில் இன்று, எம்ஜிஆர் நடித்த 'ஒளிவிளக்கு' படத்தில் வரும் ஒரு பாடலின் வரியை அதிமுக எம்எல்ஏ பாடியதற்கு, திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, துணை சபாநாயகர் சமாளித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடிய சட்டப்பேரவையில் மீன் வளம், பால் வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசினர். விவாதத்தின் முடிவில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துப் பேசினர்.
அப்போது, அதிமுக உறுப்பினர் ரத்தினசபாபதி, எம்ஜிஆர் நடித்த 'ஒளிவிளக்கு' படத்தில் இடம்பெற்ற "நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதாங்க..." என்ற பாடலை பாடினார். அப்போது, " ஊதாரிப்பிள்ளைகளை பெறவில்லை..." என்று பாடியபோது திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலையிட்டு, "அதிமுக உறுப்பினர், ஊதாரிப்பிள்ளைகளை பற்றிதான் சொல்கிறார்" என்று கூறி, உறுப்பினர்களை அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் ஜெயக்குமார், " எம்ஜிஆர் திமுகவில் இருக்கும்போதுதான் இந்தப்படம் வெளிவந்தது" என்றார். உடனே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, "சைக்கிளில் சென்று ஒளிவிளக்கு படத்தை மூன்று முறை பார்த்தேன்" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.