ஒலிம்பிக்கில், 117 பேர் பங்கேற்றுள்ளனர். ஆனால், இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது இரண்டே இரண்டு பதக்கங்கள். இந்தியர்களுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவதற்கான திறமை இல்லையா? நிச்சயமாக இருக்கிறது. ஆனால், சில விஷயங்கள் இங்கு சரியாக இல்லை என்பதே நம்முடைய அத்தனை தோல்விகளுக்கும் காரணம்.
ரியோ டி ஜெனிரோவில் நடந்துகொண்டிருக்கும் ஒலிம்பிக்ஸ் 2016-ல் பதக்கம் பெற முடியாமல் வெளியேறிய தடகள வீராங்கனை டூட்டி சந்த் போட்டியிலிருந்து திரும்பிய பிறகு ட்விட்டரில், ''எனக்குப் பயமும் பதற்றமும் அதிகம் இருந்தது. அந்தச் சூழலே வித்தியாசமாக இருந்தது. எல்லோரும் என்னைவிட உயரமாக இருந்தார்கள்" என்று பதிவு செய்திருந்தார்.
உண்மையில், 2008, 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற ஷெல்லி, டூட்டி சந்த்தைவிட 8 செ.மீ உயரம் குறைவானவர்தான். இங்கு, பிரச்னை உயரம் அல்ல... அதுக்கும் மேலான பிரச்னைகள்.
சத்துக் குறைபாடுதான் காரணம்!
பொருளாதாரத்தின் அடிப்படையில் ஒலிம்பிக்கை அணுகும்போது நல்ல பொருளாதார நிலையை உடைய நாடுகள் அதிக பதக்கங்களையும், குறைவான பொருளாதாரப் பின்னணிக் கொண்ட நாடுகள் குறைந்த பதக்கங்களையும் பெற்றிருக்கின்றன. இந்தியா, ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை அதிகபட்சமாக வாங்கிய பதக்கங்களின் எண்ணிக்கையே ஆறுதான். சர்வதேச போட்டிகளை எதிர்கொள்ளத் தேவையான உடல் தகுதி வேண்டுமெனில்... ஒரு விளையாட்டு வீரர், ஒருநாளைக்கு இத்தனை மணி நேரத்துக்கு இவற்றையெல்லாம் சாப்பிட வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால், இந்தியாவில் அப்படி எல்லாம் சாப்பிடுவதற்குப் பெரும்பாலும் திறமை உள்ள நபர்களுக்குப் பொருளாதாரப் பின்னணி இருப்பதில்லை. அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்து ஊக்குவிக்க வேண்டிய அரசும் அதைக் கண்டுகொள்வதில்லை. இந்திய அரசு, விளையாட்டுத் துறையில் உள்ள வீரர் ஒருவருக்கு, ஒருநாளைக்கு வெறும் 3 பைசாவை மட்டுமே செலவு செய்கிறது. இந்த மூன்று பைசாவில் எதைச் சாப்பிட்டு அவர் தனது உடல்நிலையைச் சர்வதேச அளவில் போட்டியை எதிர்கொள்வதற்கு ஏற்ப தயார் செய்ய முடியும்?

அரசுப் பதவிகளுக்குப் போட்டி!
இங்கு திறமை உள்ளவர்களுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை. செல்வாக்கும், பணம் படைத்தவர்களும் மேலும்மேலும் அரசாங்கப் பதவிகளைப் பறித்துக்கொள்ள திறமை உள்ளவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது வழக்கமாகவே இருக்கிறது. அப்படியே எப்போதாவது, எங்காவது திறமை இருப்பவர் சர்வதேச அளவில் போட்டியிடும் வாய்ப்பை எதிர்பாராதவிதமாகப் பெறும்போது வெற்றியடைய முடியாமல் துவண்டுபோய் திரும்பிவிடுகிறார்கள்.
சில உதாரணங்கள்!
20 கி.மீ வேகநடை போட்டியில் கலந்துகொண்ட உத்தரகாண்டைச் சேர்ந்த மணிஷ் ராவத், பார்ட் டைமாக வேலை பார்த்து வருகிறார். அப்பாவின் பென்ஷனில் குடும்பத்தை நடத்திவரும் இவர், போட்டியில் 13-வது இடத்தைப் பிடித்தார்.
ஜிம்னாஸ்டிக்கில் நான்காம் இடத்தைப் பிடித்த தீபா கர்மகர், தகுதியான இலக்கைவிடக் கூடுதல் இலக்கைத் தேர்ந்தெடுத்து உயிரைப் பணயம்வைத்து இந்த இடத்தைப் பிடித்தார். இவர் நான்காம் இடம்பிடித்ததற்குக் காரணம், அரசு கொடுத்த வசதியோ, பயிற்சியோ அல்ல... இந்தியாவுக்காக விளையாட வந்திருக்கிறோம் என்ற உணர்வுதான்.
லலிதா பாபர், தடகளப் போட்டிகளில் ஒலிம்பிக்கில் நுழைந்த மூன்றாவது வீராங்கனை. 3,000 மீட்டர் ஓட்டத்தில் 10-வது இடத்தைப் பிடித்த இவர், மாரத்தான் ஓடி தனக்கான பணத்தைச் சம்பாதித்து வந்தார். ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகும்வரை, அவரை யாருக்கும் தெரியாது.
டூட்டி சந்த், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 50-வது இடத்தைப் பிடித்தவர். 100 மீட்டர் ஒலிம்பிக் ஓட்டப் போட்டிக்குத் தேர்வான முதல் இந்தியப் பெண். ஆனால், இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் இவரது பெயருக்குப் பதிலாக வேறு பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார். இதுதான் இவரது நிலை.
இனியாவது யோசிப்போம்!

பெரும்பாலான சர்வதேசப் போட்டிகளில் பணம் படைத்தவர்கள் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆதாயம் பார்த்துவிடுகிறார்கள். இதனால் திறமை இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் எதிர்பாராதவிதமாகத் திறமை இருப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்படும்போது அவர்களால் என்னதான் திறமையும், வெறியும் இருந்தாலும்கூடச் சர்வதேசப் போட்டி நிலையை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சி இல்லாமல் பயந்துபோகிறார்கள். ஒலிம்பிக் போட்டிகளின் ஒவ்வொரு தருணத்திலும் விளையாட்டு வீரர்கள் கொண்டுள்ள மனநிலைதான் அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும். திறமையைக் காட்டிலும் விவேகமும், தந்திரமும் எதிரியை வீழ்த்த முக்கியமாகத் தேவை. ஆனால், அதற்கான முறையான பயிற்சிகளும் நுணுக்கங்களும் இருந்தால் மட்டுமே அந்தக் கலையை ஒருவர் பெறமுடியும்.
டூட்டி சந்த் தனது பயத்தை வெளிப்படையாகப் பதிவுசெய்துள்ளார். மற்றவர்கள், போட்டியின்போதே தங்களின் முகபாவனைகளில் மனநிலையை வெளிப்படுத்தியிருப்பதைக் கூர்ந்து கவனித்தால் கண்டுபிடிக்க முடியும். உதாரணத்துக்கு பேட்மிண்டன் இறுதிச்சுற்றில் விளையாடிய பி.வி.சிந்து, கரோலினா மரின் ஆகியோருடைய முகபாவனைகளைக் கூர்ந்து பார்த்தால் தெரியும். இப்படித்தான் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சரியான ஊட்டச்சத்து இல்லாமல், நெருக்கடி நிலைகளைச் சமாளிக்க முடியாத மனநிலையில் ஒலிம்பிக் போட்டிகளை எதிர்கொள்கிறார்கள்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டுமென்றால் உடல், ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்... ஊக்கம் கொடுக்கும் பயிற்சியாளர்கள் வேண்டும்... உண்மையில், பொருளாதாரப் பின்னணி நன்றாக இருக்கவேண்டும்.
கவனிக்குமா அரசு?

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.