Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 26, 2016

மதுரையை ஏன் தூங்கா நகரம்ன்னு சொல்றோம் தெரியுமா?


தமிழகத்தின் தொன்மையான நகரங்களில் ஒன்று மதுரை. தமிழும், கலையும் தழைத்தோங்கிய நகரமான மதுரைக்கு ஆதிகாலம் தொட்டு இக்காலம் வரை அழியாமல் இருக்கும் அடையாளம், தூங்கா நகரம் என்பது தான். ஏன் மதுரைக்கு அந்தப் பெயர் வந்தது..?

* இன்று நேற்றில்லை... கோவலன் -கண்ணகி காலத்திலேயே பகலில் 'நாலங்காடி' என்ற சந்தையும், இரவில் 'அல்லங்காடி' என்ற சந்தையும் இயங்கியதாக சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. இப்போதும் மதுரை வட்டாரத்தில் பல பகுதிகளில் 24 மணி நேர சந்தைகள் இயங்குகின்றன.



* மதுரையை ஆட்சி செய்பவள் மீனாட்சி. "கண் சிமிட்டாமல், தூங்காமல் நீரையே சுற்றி வரும் மீனைப்போல, மீனாட்சியும் தூங்காமல் ஊற்சுற்றி மக்களை காப்பாற்றுக்கிறாள், அதனால் தான் மதுரை தூங்கா நகரமாகியது" என மீனாட்சி தலபுராணத்தில் சொல்லப்படுகிறது. "வசுத்ர லட்சுமி பரிவாஹ சலங் மீபை லோசன..." என்று ஆதிசங்கரருடைய சகஸ்ரநாமத்திலும் சொல்லப்படுகிறது. இதன் பொருள், "பராசக்தியானவள் எப்போதும் அனைத்து உயிர்களையும் கண் மூடாது காத்து வருகிறாள்" என்பதாகும்.



* மதுரை சிம்மக்கல் பகுதிக்கு பகல் இரவு வித்தியாசமே கிடையாது. இரவில்தான் பெரும்பாலான டீக்கடைகள் திறக்கப்படுகின்றன. வெளியூர்களில் இருந்து பழங்கள் கொள்முதல் செய்ய இரவு நேரத்தில் தான் வியாபாரிகள் குவிவார்கள்.  

* யானைக்கல் ஏரியாவில் சில கடைகளில் கதவுகளே இல்லை. பல கடைகளில் கதவுகள் இருந்தும் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் கடைகள் சாத்தப்படுவதே இல்லை.



* மதுரையில் நள்ளிரவில்கூட சூடான பரோட்டா, இட்லி, பொங்கல் கிடைக்கிறது. அதிகாலை 2 மணிக்குப் போனாலும் வெங்காயக் குடல் குழம்பும், கொத்துப்பரோட்டாவும் சாப்பிடலாம்.


* கறிமேடு மீன் மார்க்கெட், சிம்மக்கல் காய்கறி மார்க்கெட்களில் இரவு 11 மணிக்கு மேல் தான் பரபரப்பே. வாகன நெரிசலில் சாலைகள் ஸ்தம்பித்து விடுகின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.