Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 5, 2016

வயல்காட்டு பொம்மைகள் என்றதும் செயல்காட்டும் வீரர்களாக மாறியிருக்க வேண்டும்! தமிழிசை


சென்னை: ஆளுங்கட்சி உறுப்பினர், வயல்காட்டுப் பொம்மைகள் என்று கூறியதைக் கேட்டதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செயல் காட்டும் வீரர்களாகத்தான் மாறியிருக்க வேண்டும். ஆனால், அவர்களை வழி நடத்த வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் வெளிநடப்பு செய்யும் தலைவராக இருந்திருக்கக் கூடாது. என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.

ஒலிம்பிக் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று விருகம்பாக்கத்தில் தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ஒலிம்பிக் போட்டியில் நமது வீரர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்துள்ளார்.

10 நாட்களுக்கு முன்பே வீரர்களை அனுப்பி வைத்து அங்குள்ள சூழ்நிலைகளைக் கண்டறிந்து அதற்கேற்ப பயிற்சிகள் மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார். ரூ.120 கோடி நிதி ஒதுக்கி அவர்களுக்கு இந்திய உணவு மற்றும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. மசோதா மிகப்பெரிய பொருளாதார புரட்சியை ஏற்படுத்தும். வாட்வரி, கொள்முதல் வரி, சேவை வரி, விற்பனை வரி, விளம்பர வரி, சுங்க வரி, மாநில வரி, சொகுசு வரி போன்ற அனைத்து வரிகளையும் ஒரே வரியாக்கி ஒரே நாடு, ஒரே வரி என்பதை மோடி உருவாக்கி இருக்கிறார். வியாபார பெருமக்களுக்கும், பொதுமக்களுக்கும் இதனால் பல ஆதாயங்கள் கிடைக்கும்.

பொருளாதாரத்தில் புரட்சியை உருவாக்கும் மிகப்பெரிய மசோதாவுக்கு ஆதரவளிக்காமல் அ.தி.மு.க. வெளி நடப்பு செய்தது வருத்தம் அளிக்கிறது. இந்த மசோதா மாநிலங்களைப் பாதிக்கும் என்ற கருத்து ஏற்புடையதல்ல. 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பெண் குழந்தைகள் மீது நடைபெறும் தாக்குதல்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது . தன்னை விரும்பாவிட்டால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது, எரித்துக் கொல்வது, திராவகம் வீசுவது போன்ற செயல்கள் தொடருகின்றன. எனவே பெண் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழக சட்டமன்றம் சத்த மன்றமாக நடக்காமல், மக்கள் மன்றமாக நடக்க வேண்டும். அங்கே, ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகளுக்கு சரியான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில், கொடுக்கும் வாய்ப்புகளை எதிர்க் கட்சிகளும் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆளுங்கட்சி உறுப்பினர், வயல்காட்டு பொம்மைகள் என்று கூறியதைக் கேட்டதும், எதிர்க் கட்சி உறுப்பினர்கள் செயல் காட்டும் வீரர்களாகத்தான் மாறியிருக்க வேண்டும். ஆனால், அவர்களை வழி நடத்த வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் வெளிநடப்பு செய்யும் தலைவராக இருந்திருக்கக் கூடாது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே ஆக்கப்பூர்வமான மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என்றார்.

தி.மு.க. உறுப்பினர்களைப் பார்த்து '89 வயக்காட்டு பொம்மைகள்' என்று அ.தி.மு.க. உறுப்பினர் முத்தையா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க. உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நேற்று(புதன்)  தமிழக சட்டமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.