Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 12, 2016

2 வருடங்களில் 200 என்ஜினியரிங் கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதிக்கப்பட்டது - மத்திய அரசு


நாட்டில் கடந்த இரண்டு வருடங்களில் 200 என்ஜினியரிங் கல்லூரிகளை பல்வேறு காரணங்களுக்காக மூடுவதற்கு இந்தியப் பொறியியல் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அனுமதி வழங்கியது என்று மத்திய அரசு இன்று தெரிவித்தது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக எம்.சி.ஏ., பி.டெக். தகவல் தொழில்நுட்பம், பி.இ, கணினி அறிவியியல், இ.சி.இ. உள்ளிட்ட கணினி படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் வெகுவாகக் குறைந்து வருகிறது. மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் பல பொறியியல் கல்லூரிகள் குறிப்பிட்ட படிப்புகளைக் கைவிடுவதும், சில பொறியியல் கல்லூரிகள் இழுத்து மூடப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றன.

இந்நிலையில் மாநிலங்களவையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணைமந்திரி மகேந்திர நாத்பாண்டே அளித்த எழுத்துவடிவிலான பதிலில், 2015-16-ம் கல்வி ஆண்டில் நாட்டில் மொத்தம் 10,328 என்ஜினியரிங் கல்லூரிகள் செயல்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிப்பில் சேர்ந்து உள்ளனர். 2015-16 கல்வி ஆண்டில் நாடு முழுவதும் 125 என்ஜினியரிங் கல்லூரிகளும், 2016-17ம் கல்வியாண்டில் 106 என்ஜினியரிங் கல்லூரிகளும் பல்வேறு காரணங்களுக்காக கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதி கோரிஉள்ளனர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று இந்தியப் பொறியியல் கல்வி கவுன்சில் அனுமதி வழங்கியது என்று மத்திய அரசு கூறிஉள்ளது.

இதற்கிடையே ஜார்க்கண்ட் மத்திய பல்கலைக்கழகம் ஒரு பஞ்சாயத்து பயிற்சி வளாகத்தில் நடைபெறுகிறதா? என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய மகேந்திர நாத் பாண்டே, ”ஆம் சார்,”என்றார். விளக்கம் அளிக்கையில், முறைகேடு நடைபெற்றது தொடர்பாக சிபிஐ விசாரணை செய்துவரும் நிலையில் புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. பல்கலைக்கழகம், ஒப்பந்ததாரர்கள்/ சப்ளையர்கள்/ கட்டட வடிவமைப்பாளர்கள் என யாருக்கும் பணம் கொடுக்கவேண்டாம் என்று சிபிஐ அறிவுரை வழங்கிஉள்ளது.

கட்டுமான பணிகள் முடிவடையாமல் உள்ளதால், பல்கலைக்கழகம் அங்கு மாற்றப்படவில்லை என்று கூறினார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.