Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 5, 2016

'மருத்துவ முகாம்களில் பங்கேற்கும் மாணவர்களுக்கு டீ, டிபன், போக்குவரத்துக்கு ரூ.20!'


அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் மூலம் நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் பங்கேற்கும் மாணவர்களுக்கு டீ, டிபன், போக்குவரத்து செலவுக்கு 20 ரூபாய் வழங்க, அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் 6 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கு என்று தனியாக மருத்துவ முகாம் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கான இந்த மருத்துவ முகாமில், எலும்பு முறிவு, கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் கலந்து கொள்வார்கள்.



மாணவர்களின் உடலை பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் குழு, மாணவர்களுக்குக் கை மற்றும் காலில் ஊனம் இருந்தாலோ, காது கேட்காத பிரச்னை இருந்தாலோ அதற்கான மருத்துவ உபகரணங்கள் இந்த முகாமில் வழங்கப்படும். உடலில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மருத்துவ முகாமில் பங்கேற்கும் மாணவர்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ரேஷன் கார்டு, வருமானச் சான்றிதழோடு வரவேண்டும்.

இது தொடர்பாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்குனர் டாக்டர் அறிவொளியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தும்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மருத்துவ முகாமில் பங்கேற்கும் உடல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு மருத்துவ உதவித்தொகை மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.

மேலும், மருத்துவ முகாமில் பங்கேற்கும் மாணவர்களுக்குக் காலை டிபன் மற்றும் டீ, காப்பி போன்றவைகளும் போக்குவரத்துச் செலவுக்கு ஒரு மாணவனுக்கு 20 ரூபாய் வழங்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காகக் கணிசமான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.