சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 399 ரூபாய் தொடக்க விலையில் விமான டிக்கெட் விற்பனை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அவ்வப்போது மலிவு விலைக் கட்டண டிக்கெட் குறித்த அறிவிப்பை வெளியிடுவது உண்டு. அந்த வகையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நிறுவனம் அகமதாபாத் - மும்பை, அம்ரிஸ்தர்- ஸ்ரீநகர், பெங்களூரு -சென்னை, பெங்களூரு - கொச்சி, கோயம்புத்துர்- ஹைதராபாத், ஜம்மு- ஸ்ரீநகர், மும்பை- கோவா, மும்பை- ஸ்ரீநகர் மார்க்கங்களில் சலுகை விலையில் டிக்கெட் அறிவித்துள்ளது.
அதன்படி. பெங்களூரு -சென்னை, அகமதாபாத் - மும்பை மார்க்கங்களில் விமான டிக்கெட்டின் அடிப்படை விலை 399 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரிகள் தனி. இந்த சலுகை கட்டண பயணத்துக்கான முன்பதிவு 11ம் தேதி வரை நடைபெறுகிறது.வரும் 18 ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரையில் பயணிக்கலாம். சலுகைக் கட்டணத்தில் எத்தனை டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவிக்கவில்லை. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வழி பாதைக்கான டிக்கெட் மட்டுமே எடுக்கப்படும். குழுவாக விமான டிக்கெட் எடுக்க முடியாது. டிக்கெட்டுகளை ரத்து செய்ய விரும்பினால் ரத்து செய்யலாம். ஸ்பைஸ் ஜெட் வெப்சைட், ஆப், டிராவல் ஏஜென்ட் என அனைத்து வழிகளிலும் டிக்கெட் புக் செய்ய முடியும்.
அதுபோல் துபாய் - மும்பை, துபாய் - டெல்லி மார்க்கங்களில் அடிப்படை விலைக் கட்டணம் 2,999 ரூபாய்
இதனிடையே சுதந்திர தினத்துக்காக ஏர் இந்தியா நிறுவனமும் விமானக்கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது. மழைக்கால சலுகை என்ற பெயரில் பெங்களூரு- சென்னை, டெல்லி - ஜெய்ப்பூர், சென்னை - பெங்களூரு மார்க்கத்தில் 1,199 ரூபாய் அடிப்படைக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 30 ம் தேதி வரை இந்த சலுகைக் கட்டணத்தில் பறக்கலாம். ஏர் இந்தியாவும் இந்த சலுகைக்கட்டணத்தில் ஒதுக்கப்பட்டுள்ள சீட்டுகளின் எண்ணிக்கையை தெரிவிக்கவில்லை. வரும் 15 ம் தேதி வரை டிக்கெட்டுகள் புக் செய்யலாம் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜுலை முதல் செப்டம்பர் மாதம் வரை விமானப்பயணிகளின் எண்ணிக்கை குறையும். இந்த காலக்கட்டத்தில் விமான நிறுவனங்கள் சலுகைகளை அறிவிப்பது வழக்கம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.