Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 29, 2016

தீபா, சிந்து, சாக்ஷி, கோபிக்கு சச்சின் அளித்த பரிசு!


ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா, சிந்து, சாக்ஷி, கோபிசந்த் ஆகியோருக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பி.எம். டபிள்யூ கார் வழங்கினார்.

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சரித்திரம் படைத்த பி.வி.சிந்து (பேட்மிண்டன்), சாக்‌ஷி மாலிக் (மல்யுத்தம்), மயிரிழையில் பதக்கத்தை நழுவவிட்ட தீபா கர்மகருக்கு (ஜிம்னாஸ்டிக்ஸ்) கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டும், பரிசுகள் வழங்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில், அவர்களை கவுரவிக்கும் விதமாக ஹைதராபாத் நகரில் இன்று மிகப்பெரிய பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வீராங்கனைகளும், பி.வி.சிந்துவின் பயிற்சியாளரான கோபிசந்தும் மேடையில் அமரவைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

Image result for sachin bought car for olympic stars


கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் பல்வேறு விளையாட்டுத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த விழாவில், ஒலிம்பிக் வீராங்கனைகள் மூவருக்கும் விலையுயர்ந்த (BMW) கார்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்துக்கும் (BMW) கார் பரிசாக அளிக்கப்பட்டது.

சச்சினின் பரம ரசிகையான சாக்‌ஷி மலிக், இந்தவிழாவில் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த டெண்டுல்கருக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்தார். 'என்னுடைய சகோதரராக நான் அன்பு வைத்துள்ள அவருடன் நானும் என் குடும்பத்தாரும் இணைந்து நின்று செல்ஃபி எடுத்துகொள்ள சச்சின் அனுமதிக்க வேண்டும்' என விழா மேடையில் இருந்த ஒலிபெருக்கி மூலம் சாக்‌ஷி மலிக் தனது விருப்பத்தை கோரிக்கையாக டெண்டுல்கருக்கு தெரிவித்தார்.

இதனையடுத்து, விழா மேடைக்கு வந்த சச்சின் டெண்டுல்கர், சாக்‌ஷி மலிக் மற்றும் அவரது குடும்பத்தாருடன் இணைந்து நின்று செல்ஃபி எடுத்து கொண்டார். இதேபோல், பி.வி.சிந்து, அவரது பயிற்சியாளர் கோபிசந்த், தீபா கர்மகர் ஆகியோருடனும் செல்ஃபிக்கு போஸ் கொடுத்த டெண்டுல்கர், அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.